பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பின்னிணைப்பு

எகர ஒகர எழுத்துக்கள்

தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல் முதலிய பழைய இலக்கண நூல்கள் எல்லாம் எகர ஒகரங்கள் புள்ளி பெறும் என்று கூறுகின்றன. இப்படித்தான் பண்டைக் காலத்து மக்கள் எழுதி வந்தார்கள். ஆனால், அவர்கள் ஓலையேட்டில் எழுதியபடியினால் புள்ளியைப் பெரும்பாலும் எழுதுவதில்லை. ஏன்? கல்லிலும் செப்பேடுகளிலும் எழுதப்படும் எழுத்துக்களிலும் கூட அவர்கள் புள்ளி வைப்பதில்லை. இவ்வாறு புள்ளி வைக்காமல் எழுதப்படும் சொற்களைப் படிப்பதில் சில சமயங்களில் ஐயப்பாடுகள் தோன்றுவதுண்டு. உதாரணமாக எரி, ஒதி என்னும் சொற்களை எடுத்துக் கொள்வோம். இவற்றில் எகரமும் ஒகரமும் புள்ளி பெறாதபடியால், இலக்கண முறைப்படி ஏரி என்றும் ஓதி என்றும் இவற்றைப் படிக்க வேண்டும். புள்ளி பெற்றிருந்தால் எரி என்றும் ஒதி என்றும் படிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், ஏடெழுதுவோர் எகர ஒகரங்களுக்குப் புள்ளி வைக்க வேண்டியதை மறந்து விடுவது வழக்கம். அப்போது, அச் சொற்களை எரி என்று படிப்பதா ஏரி என்று படிப்பதா, ஒதி என்று படிப்பதா ஓதி என்று படிப்பதா என்னும் ஐயப்பாடு நிகழும்.

இச் சொற்களைப் பற்றி இரண்டு வெண்பாக்கள் காலத்தில் வழங்கி வந்தனர். அவை:

நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீள்மரமாம் நீர்நிலையோர் புள்ளிபெற நெருப்பாம்--சீரணவு காட்டொன் றொழிப்ப இசையா மதனளவில்

மீட்டொன் றொழிப்ப மிடறு.

பண்டைக்

இச் செய்யுள், அணியியலில் மாத்திரைச் சுருக்கம் என்னும் சொல்லணிக்கு உதாரணமாகக் கூறப்படுகிறது.