பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

49

ஒருவாறு கல்வியிற் கருத்தைச் செலுத்த முடிந்தது. இச்சிறுபான்மை யோராகிய சமய ஊழியர்களிலும் ஒரு சிலர் தாம் உரைநடைநூல் இயற்ற முன்வந்தனர். விரல்விட்டெண்ணக் கூடியபடி மேலே குறிப்பிட்ட நாலைந்து உரைநடை நூலாசிரியர்களைத் தவிர, வேறு ஆசிரியர்கள் 19-ஆம் நூற்றாண்டு வரை ஏற்படவில்லை.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியற் குழப்பங்களும் சண்டைகளும் ஒழிந்து, ஆங்கில அரசாங்கம் நிலைபெற்று, உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பும், தேசத்தில் அமைதியும், ஒழுங்கும் ஏற்பட்டபோது, இயற்கையாகவே மக்கள் கல்வியில் கருத்தைச் செலுத்தினார்கள். உரைநடை நூல்களின் இன்றியமை யாமையை உணர்ந்து, உரைநடை நூல்களை இயற்றத் தொடங்கினார்கள். அன்றியும், இந்நூற்றாண்டில் தான் பாதிரி மார்களாலும் அரசாங்கத் தாராலும் தேசமெங்கும் பாடசாலைகள் நிறுவப்பட்டன. நாட்டவர்களால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு அரசாங்கத்தார் பொருளுதவிசெய்து ஊக்கப்படுத்தினர். இவ்வாறு ஆங்காங்கே பாடசாலைகள் ஏற்பட்ட படியாலும், இப்பாடசாலைகளில் ஐரோப்பிய முறைப்படி இலக்கியம், பூகோளம், சரித்திரம் முதலிய எல்லாப் பாடங்களையும் உரைநடைப் பாடமாகக் கற்பிக்கத் தொடங்கியபடியாலும், தமிழ்உரைநடைநூல்கள் ஏராளமாக எழுதப்பட்டன. இஃதன்றியும், இந்த நூற்றாண்டிலே தான் அச்சுப் பொறிகள் நாடு முழுதும் ஆங்காங்கே நிறுவப்பட்டன. அரசாங்க அலுவல்களில் அமர்ந்திருந்த ஐரோப்பிய உயர்தர அலுவலாளர்களும், சமயத் தொண்டாற்றிவந்த ஐரோப்பிய பாதிரிமாரும் தமிழ்மொழியைக் கற்கவேண்டிய கட்டாயம் அக்காலத்தில் ஏற்பட்டிருந்தபடியால், அவர்கள் எளிதாகத் தமிழைக் கற்கும் பொருட்டு உரைநடை நூல்கள் எழுதப்பட்டு அச்சிடப்பட்டன. 'மிஷன்” என்னும் கிறித்துவச் சங்கங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டு, அச் சங்கங்களின் வழியாக மதச் சார்பான உரைநடை நூல்கள் ஏராளமாக அச்சிடப்பட்டுக் குறைந்த விலைக்குக் கொடுக்கப்பட்டன. அன்றியும், அச் சங்கங்கள் உரைநடையில் எழுதப்பட்ட துண்டு வெளியீடுகளை அச்சிட்டு விலையின்றி மக்களுக்கு வழங்கிவந்தன. இதன் வாயிலாகவும் உரைநடைநூல்கள் தமிழ்நாட்டிற் பரவ 6 வழியுண்டாயிற்று. பாதிரிமார்கள் செய்துவரும் இத்தகைய சமய ஊழியத்தைக்கண்டு, இதுகாறும் இக்காரியத்தில் உறங்கிக்கிடந்த இந்துக்கள் விழிப்படைந்து, இந்து மதச்சார்பான நூல்களையும் புராண

66