பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

53

அவற்றிலும் பாடவேறுபாடுகளையாவது இடைச்செருகல் களையாவது காணமுடியும். ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஒரே பாட முள்ளவையா யிருப்பது அருமை. திருக்குறளுக்கு உரையெழுதிய மணக்குடவர், திருக்குறள் 7-ஆம் அதிகாரத்திற்கு "மக்கட்பேறு" என்னும் தலைப்பெயர் கொடுத்திருக்க, மற்றொரு உரையாசிரியராகிய பரிமேலழகர் அதே அதிகாரத்திற்குப் "புதல்வரைப் பெறுதல்” என்னும் தலைப்பெயர் இட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இஃது, ஆண்மக்களுக்கும் பெண் மக்களுக்கும் சம உரிமையுண்டு என்னும் மணக்குடவர் கருத்தையும், பெண்மக்களுக்கு ஆண்மக்களைப்போல் சம உரிமை கூடாது என்னும் பரிமேலழகர் கொள்கையையும் நன்கு விளக்குவதோடு, ஏடெழுதுவோர் அல்லது உரையிடுவோரின் மனப்பான்மைக்கும் மதக் கொள்கைக்கும் ஏற்ப நூல்களிற் பாடவேறுபாடு அமைக்கப்படும் என்பதற்குச் சிறந்த சான்றாகவும் நிற்கின்றது. இவ்வகை ஏட்டுச் சுவடிகளிற் பல குறைபாடுகள் உண்டு. இவ்வகை குறைபாடுகளும் இடர்ப்பாடுகளும் அச்சுப் புத்தகத்திற் க காணப்படா. நிற்க.

இனி, தமிழில் அச்சுப் புத்தகம் வந்த வரலாற்றினை ஆராய்வோம். நமது நாட்டில் ஐரோப்பியர் வந்த பிறகு தான் அச்சுப் புத்தகங்கள் உண்டாயின. நமது நாட்டில் கிறித்துவ மதத்தைப் பரவச்செய்வதற்காகப் பெரும் தொண்டாற்றி வந்த ஏசுவின் சபைப் பாதிரிமார்கள் முதன் முதல் தமிழில் அச்சுப்புத்தகம் உண்டாக் கினார்கள். இந்திய மொழிகளில் முதன் முதல் அச்சுப் புத்தகம் உண்டானது தமிழ்மொழியிலேதான். பிறகுதான் ஏனைய ஏனைய இந்திய மொழிகளில் அச்சுப் புத்தகம் உண்டாயிற்று.

நமது நாட்டில் தமிழ் அச்சுப் புத்தகம் உண்டான வரலாற்றை ஆராய்வதற்கு முன்னம், ஐரோப்பாக் கண்டத்தில் அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிடுவது அமைவுடைத்து. ஆனால், ஐரோப்பாக் கண்டத்தில் அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங் களின் முழு வரலாறு இப்போது எமக்குக் கிடைக்கவில்லை. எனினும், யாமறிந்த வரையில் எழுதுவோம். மலையாளத்துத் தாவர நூல் என்னும் புத்தகம் மலையாள தேசத்தில் உள்ள கொடி செடிகளைப் பற்றிக் கூறும் நூல். இந்த நூலில் மரஞ்செடிகளின் பெயர்கள் மட்டும் தமிழில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இந்நூல் ஒல்லாந்து தேசத்தின்1 தலைநகரான ஆம்ஸ்டர்டாம்2 நகரத்தில் 1686-ல் அச்சிடப்பட்டது.