பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

6

55

மலையாள தேசத்தில் உள்ள கொச்சியிலும், அதன் பிறகு சுமார் 1578-ல், திருநெல்வேலியில் உள்ள புன்னைக்காயல் என்னும் இடத்திலும், ஏசுவின் சபை பாதிரிமார் அச்சுப் பொறிகளை ஏற்படுத்தினார்கள். பிறகு வைப்புக்கோட்டை, அம்பலக்காடு முதலிய இடங்களிலும் அச்சுப்பொறிகள் அமைக்கப்பட்டனவாகத் தெரிகின்றன. இந்த அச்சுப் பொறிகள் யாவும்16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தான் அமைக்கப்பட்டன.

முதல் அச்சுப்புத்தகம் கி.பி.1577-ல் அச்சிடப்பட்டது. "கிறித்துவ வேதோபதேசம்”” என்னும் பெயருள்ள அப்புத்தகம் வைப்புக் கோட்டை என்னும் ஊரில் அச்சிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஜோண் கோண்ஸால்வஸ் என்னும் பெயருள்ள, ஸ்பெய்ன் தேசத்தவராகிய ஏசுவின் சபைப் பாதிரியார் உண்டாக்கிய அச்செழுத்துக்களைக் கொண்டு இப்புத்தகம் அச்சிடப்பட்டது. அடுத்தபடியாக,1579-ல் “கிறித்துவ வணக்கம்”8 என்னும் புத்தகம் கொச்சியில் அச்சிற் பதிக்கப்பட்டது. இதே ஆண்டில் போர்ச்சுகீஸ் தமிழ்ப் புத்தகம்’ ஒன்றும் மலையாள தேசத்தில் அம்பலக்காடு என்னும் இடத்தில் அச்சிடப்பட்டது. இஃது இன்னாசி ஆச்சாமணி” என்னும் சுதேசி ஒருவர் உண்டாக்கிய அச்செழுத்துக் கொண்டு அச்சிடப் பட்டது. அன்றியும், ஐரோப்பியப் பாதிரிமார்கள் தமிழ் கற்றுக் கொள்ளுவதற்கு உதவியாகச் சில புத்தகங்களும் அச்சிடப்பட்டன வாகத் தெரிகின்றன. மேற் சொல்லப்பட்ட “கிறித்தவ வேதோபதேசம்,” “கிறித்துவ வணக்கம்” என்னும் இரண்டு புத்தகங்களைப் பற்றிச் சிலருக்கு ஓர் ஐயப்பாடு உண்டு. அஃதென்னவென்றால், இவ்விரு புத்தகங்களும் தமிழ்மொழியில் அச்சிடப்பட்டனவா, அல்லது மலையாள மொழியில் அச்சிடப் பட்டனவா என்கிற ஐயப்பாடுதான். அவை மலையாள மொழியில் எழுதப்பட்டவை என்று சிலரும், தமிழில் எழுதப்பட்டவை என்று வேறு சிலரும் கருதுகிறார்கள். ஆனால், அப் புத்தகங்கள் இப்போது இந்தியாவிற் கிடையா. மேற்படிப் புத்தகங்களைப் பற்றி எழுதிய ஐரோப்பியர்கள் அவை “மலபார்' மொழியில் அச்சிடப்பட்டன என்று எழுதியிருக்கிறார்கள். "மலபார்" மொழியில் எழுதப்பட்டவை என்பதனாலும், மலையாள தேசத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதனாலும், அவை மலையாளப் புத்தகங் களாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஒரு கட்சியார் கொள்கை. இவர்கள் நினைப்பது சரியானதென்று தோன்றலாம். ஆனால், உள்