பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

நுழைந்து ஆராய்ந்து பார்த்தால், அவர்களின் கருத்துத் தவறான தென்றும், உண்மை அவர் கருத்துக்கு மாறானதென்றும் தெரியவரும். மலையாள தேசத்திலே அச்சிட்ட படியினாலே அப்புத்தகங்கள் மலையாள மொழியில்தான் இருக்கவேண்டுமென்று நினைப்பது தவறு. "மலபார்' மொழி என்றால் மலையாள மொழி என்று கருதுவதும் தவறாகும். இப்பொழுது "மலபார்" என்கிற சொல்லுக்குப் பொருள் வேறு; சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன் இச் சொல்லுக்கிருந்த பொருள் வேறு. இந்தக் காலத்தில் "மலபார்” என்னும் ஐரோப்பியச் சொல் மலையாள தேசத்தைக் குறிக்கிறது. ஆனால், இதே “மலபார்” என்னும் சொல் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர் அல்லது தமிழ் மொழி என்னும் பொருளில் வழங்கி வந்ததேயன்றி, இப்போது வழங்கும் பொருளைக் குறிப்பிடவில்லை. நமது நாட்டில் வாணிபத்தின் பொருட்டு வந்திருந்த பல்வேறு ஐரோப்பிய இனத்தாரும் தமிழரை “மலபாரிகள்” என்றும், தமிழ்மொழியை "மலபார் மொழி” என்றும் அக்காலத்தில் வழங்கி வந்ததை அவர்கள் எழுதியிருக்கும் நூல்களிலிருந்து இப்போதும் தெரிந்துகொள்ளலாம். இவர் மட்டுமின்றி, இலங்கையை ஆண்டிருந்த ஒல்லாந்தர் முதலிய ஐரோப்பியரும் இலங்கைத் தமிழரை “மலபாரிகள்" என்று வழங்கிவந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் பல நூல்களிலிருந்து கிடைக்கின்றன. இக்காலத்தில் இ பெயர் பலருக்கு வியப்பையுண்டாக்கக் கூடும். ஆனால் இஃது உண்மை என்பது ஆராய்ந்து பார்த்தால் விளங்கும்.

ஐரோப்பியர் தமிழரை "மலபாரிகள்" என்று ஏன் வழங்கினார்கள்? இப்பெயரை அவர்கள் முகம்மதியரிடத்திலிருந்து கற்றதாகத் தெரிகிறது. ஐரோப்பியர் வருவதற்கு முன்னமே, முகம்மதியர் சிலர் தென் இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர். அவர்கள் தமது வழி நடையைப்பற்றி எழுதிய புத்தகங்களில் தென் இந்தியாவை "மாபார்" என்று எழுதியிருப்பதாகவும், பிற்காலத்தில் வந்த ஐரோப்பியர் “மாபார்” என்னும் சொல்லை “மலபார்” என்று திரித்து வழங்கினார்கள் என்பதாகவும் சொல்லப்படுகிறது. தென் இந்தியாவைக் குறிப்பிடும் “மாபார்” என்னும் சொல்லை “மலபார்” ஆக்கி ஒலித்த ஐரோப்பியர் தென் இந்தியாவில் வாழும் மக்களையும் “மலபார்” என்று வழங்கி னார்கள். பிறகு இச்சொல், தென் இந்தியாவில் பெருங்குடிமக்களாக விருக்கும் தமிழருக்கும், அவர்களின் மொழியாகிய தமிழுக்கும் அமைந்திருந்தது. இப்போது அச்சொல் பண்டைய பொருள்களை