பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

57

உதறிவிட்டு, மலையாள தேசத்தைமட்டும் குறிக்கிறது. "மலபார்’ என்னும் இச்சொல்லின் வரலாற்றினை அறியாதவர், இப்பொழுது வழங்கும் பொருளில் அச்சொல்லை வைத்து ஆராய்வதால், உண்மை புலப்படாமல் இடர்ப்படுகிறார்கள். இந்த இடர்ப்பாட்டினால்தான் மேற்சொன்ன இரண்டு புத்தகங்களும் மலையாள மொழிப் புத்தகங்க ளென்று அவர்கள் கருதுகிறார்கள். தங்கள் கருத்துக்குத் துணையாக, அப் புத்தகங்கள் மலையாள தேசத்தில் அச்சிடப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். மலையாள தேசத்தில் அச்சிடப்படும் புத்தகம் மலையாள மொழியில்தான் இருக்கவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. கிறித்துவ மதத்தைப் பரவச் செய்த ஏசுவின் சபைப் பாதிரிகளின் தலைமை இடம் அக் காலத்தில் மலையாள தேசத்தில் இருந்தது. ஏசுவின் சபைப் பாதிரிகளின் தலைவரும் மலையாள தேசத்தில்தான் வாழ்ந்து வந்தார். ஆகையால், மதச் சார்பான புத்தகங்கள் அச்சிடுவதற்குரிய அச்சுப் பொறிகளும் அவ்விடத்திலேயே ஏற்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் மதுரையில் வாழ்ந்திருந்த தத்துவ போதக சுவாமி என்னும் ஏசுவின் சபைப் பாதிரியார் தமிழில் எழுதிய "ஞானோபதேச காண்டம் என்னும் புத்தகம், தமிழ்நாட்டில் அக்காலத்தில் அச்சுப் பொறி இல்லாதபடியால், மலையாள தேசத்தில் அம்பலக்காடு என்னும் இடத்தில், பாதிரிமாரால் நிறுவப்பட்டிருந்த அச்சுப்பொறி நிலையத்தில் அச்சிடப்பட்டதென்றும் அப்புத்தகத்தை அச்சிற்பதிப்பிப்பதற்காகத் தமிழ் நாட்டிலிருந்த அந்த்ரேப்பிரயா என்னும் பாதிரியார் அம்பலக்காட்டுக்குச் சென்றார் என்றும் வரலாற்று வாயிலாய் அறிகிறோம். இதனால், மலையாளக் கரையில் தமிழ்ப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன என்பது நன்கு விளங்கும்.

இதுவன்றியும், மேற்குறித்த “கிறித்துவ வணக்கம்” “கிறித்துவ வேதோபதேசம்” என்னும் இரண்டு புத்தகங்களும் தமிழ்ப் புத்த கங்கள்தாம் என்பதற்குவேறு சான்றுகளும் உள்ளன. அவை என்ன வென்றால், தரங்கம்பாடிச் திருச்சபையைச் சேர்ந்த ஸார்ட்டோரியஸ் பாதிரியார் 11 சென்னைக்கு வடக்கேயுள்ள பழவேற்காடு என்னும் இடத்தில், ஒரு கிறித்துவ மதபோதகர் 1579-இல் கொச்சியில் அச்சிடப்பட்ட 'கிறித்துவ வணக்கம்' என்னும் தமிழ் அச்சுப் புத்தகத்தைப் பார்த்தெழுதப்பட்ட கையெழுத்துப்படி ஒன்றை வைத்திருந்ததைத் தாம் பார்த்ததாக,1743-இல் எழுதியிருக்கிறார். மேலும், அந்தப் பாதிரியார் கீழ் வரும் செய்தியையும் எழுதி