பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

கோண்ஸால்வஸ் என்னும் பாதிரியார் தமிழ் அச்செழுத்துக்களை உண்டாக்கி, “கிறித்துவ வணக்கம்” என்னும் புத்தகத்தை அச்சிட்டதாகச் சொல்லுகிறார்கள். இந்தப் புத்தகம் திருநெல்வேலியில் உள்ள புன்னைக்காயல் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டதாக வேறு சிலர் எழுதியிருக்கிறார்கள். இதன் உண்மை விளங்கவில்லை. இவ்விடத்தில் தமிழ்மொழியிலும் சில நூல்கள் அச்சிடப்பட்டன. அவற்றின் விவரம் தெரியவில்லை.

மலையாள தேசத்தில், அம்பலக்காடு என்னும் இடத்தில், மற்றொரு பொறி 17-ஆம் நூற்றாண்டில் அமைக்கப் பட்டது. எந்த ஆண்டில் நிறுவப்பட்டதென்று தெரியவில்லை. ஆனால், 1679-இல் இன்னாசி ஆச்சாமணி” என்னும் உபதேசியார் தமிழில் அச்செழுத்துக் களை உண்டாக்கினார். மேற்படி ஆண்டிலே அந்தோனி டிப்ரில் பாதிரியார் எழுதிய தமிழ்-போர்ச்சுகீஸ் அகராதியும், தெகோஸ்ற்றா பாதிரியார் எழுதிய தமிழ் இலக்கணமும் இங்கு அச்சிடப்பட்டன. இங்கு அச்சிடப்பட்ட தமிழ் நூல்களின் முழு விவரமும் கிடைக்க வில்லை.

ம்

பறங்கியர் இலங்கைத் தீவிலும் செல்வாக்குப் பெற்றிருந் தார்கள். அங்கு யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலுள்ள தமிழர்களில் பலரைக் கிறித்தவராக்கியும், பல கோயில்களைக் கட்டியும் மத ஊழியம் செய்திருக்கிறார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் அச்சுப் பொறிகள் அமைத்து, தமிழ் நூல்களை அச்சிட்டார்களா என்பது தெரியவில்லை. யாம் ஆராய்ந்தவரையில் இல்லை என்றே தோன்றுகிறது. பறங்கியருக்குப் பிறகு, இந்தியாவுடன் வாணிபம் செய்யவந்த ஒல்லாந்தர், பிற்காலத்திற் பறங்கியர்களை இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் துரத்தி விட்டு, பறங்கியரின் ஆட்சியை அழித்து விட்டார்கள். அன்றியும், பறங்கிகளின் சார்பாகச் சமய ஊழியம் செய்திருந்த ஏசுவின் சபைப் பாதிரிமார்களையும் ஊரை விட்டுப் போகும்படி கண்டிப்பான உத்தரவு இட்டார்கள். ஏசுவின் சபைப் பாதிரிமார்கள் போய்விட்டதனால் அவர்கள் செய்துவந்த அச்சு வேலைகளும் நிறுத்தப்பட்டன. ஒல்லாந்தரும் தமது கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக முயற்சி செய்தார்கள். ஆனால், இந்தியாவில் அவர்கள் தமது வேலையை அதிகமாகச் செய்ய வில்லை என்று தோன்றுகிறது. ஒல்லாந்தர் இந்தியாவில் தமிழ் நூல்களை அச்சிட்டதாகத் தெரியவில்லை. ஒல்லாந்தர் காலத்தில் தமிழ் நாட்டில் அச்சுவேலை நின்று விட்டது