பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -17

அதுமுதல் தமிழரும் அச்சுப் பொறிகள் அமைக்க முற்பட்டனர். இக் காரணங்களால் இந்த நூற்றாண்டில் அச்சுப் புத்தகங்கள் மிகுதியாக அச்சிடப்பட்டன. சென்ற 19-ஆம் நூற்றாண்டில், கீழ்க்கண்ட அச்சுக்கூடங்கள் மிஷனரிமாரால் ஏற்படுத்தப்பட்டன.

“எஸ்.பி.ஸி.கே.19 என்னும் சங்கத்தார் சென்னையில் 1815-ல் ஒரு

அச்சுப்பொறி நிறுவினார்கள்.

திருநெல்வேலிப் பாளையங்கோட்டையில் ஒரு மதப் பிரசார சங்கம் 1822-ல் ஏற்படுத்தப்பட்டு, அதன் சார்பாக ஓர் அச்சுப்பொறி நிறுவப்பட்டது. இதே ஆண்டில் நாகர்கோயில் என்னும் இடத்திலும் ஒரு சபையும் அச்சுப்பொறியும் நிறுவப்பட்டன.

1830-ல் நெய்யூர் என்னும் இடத்தில் பரப்புக் கழகமு(பிரசார சபை)ம் அச்சுப் பொறியும் அமைக்கப்பட்டன.

1821-ல் யாழ்ப்பாணத்து நல்லூரில் சர்ச்மிசன் சபையார் ஓர் அச்சுப் பொறி நிறுவினார்கள்.

1840-ல் புதுச்சேரியில் ஓர் அச்சுப்பொறி நிலையம் நிறுவப்பட்டது.

1870-ல் இலங்கைக் கத்தோலிக் சபையார் ஓர் அச்சுப் பொறியைக் கொழும்பில் ஏற்படுத்தினர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இஃது யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு போகப்பட்டதாகத் தெரிகிறது.

மேற்சொன்ன அச்சுக் கூடங்களிலிருந்து வெளிவந்த அச்சுப் புத்தகங்கள் மிகப் பல. அச்சுப்புத்தகங்களை உண்டாக்குவதற்கு இவை நல்ல வேலை செய்துவந்தன. இவையன்றி, “சென்னைக் கல்விச் சபை, ’20 “சென்னைப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,”21 “தென்னிந்தியக் கிறித்துவப் பாடசாலைப் புத்தகச் சங்கம்”22 முதலிய சங்கங்களும் அச்சுப் புத்தகங்களை வெளிப்படுத்துவதில் 19-ஆம் நூற்றாண்டிலே அதிகமாக உழைத்து வந்தன.