பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

69

ஸார்ஜண்ட் என்பவரால் எழுதப்பட்ட இப்புத்தகம் 1850-இல் பாளையங்கோட்டையில் அச்சிடப்பட்டது.

இந்து சாதி விளக்கம் சார்ல்ஸ் சைமன் என்பவரால் எழுதி 1852- இல் சென்னையில் அச்சிடப்பட்டது.

க்ஷேத்திரக் கணிதம் முதலியன

வீச கணிதம்12: இது யாழ்ப்பாணத்தவரான காரல்3 என்பவரால் 1855-இல் எழுதப்பட்டு, யாழ்ப்பாணத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. க்ஷேத்திரக் கணிதம்: இது பாளையங்கோட்டைச் சர்ச் மிசன் உயர்தரப் பாடசாலையின் தலைமையாசிரியராயிருந்த டேவிட் சாலமன் என்பவரால் எழுதப்பட்டது. 1859-இல் அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது.

க்ஷேத்திரக் கணிதம்4 ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப் பட்ட இந் நூல் 1899-இல் சென்னையில் அச்சிடப்பட்டது. எச். ஹாலிம், எம்.டி. அடைக்கலம் என்பவர்களால் எழுதப்பட்டது.

இரண்டு புத்தகங்கள்5 கனம் ஜி.யு. போப் ஐயரவர்களால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. இவை யாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன

என்பது தெரியவில்லை.

க்ஷேத்திரக் கணிதம்16: இது ஸ்ப்ராட்17 என்பவரால் பாளையங் கோட்டையில் அச்சிடப்பட்டது.

நில அளவை நூல்18. இஃது 1858-இல் அச்சிடப்பட்டது. மொழி பெயர்ப்பாளர் இன்னார் என்று தெரியவில்லை.

இயற்கைப் பொருள் நூல், பிராணி நூல் முதலியன

பலவகைத் திருட்டாந்தம்19: இது பொது அறிவு நூல். கனம் இரேனியுஸ் ஐயரால் எழுதிப் பாளையங்கோட்டை அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.

ஊர்திரி விலங்கியல் (1836-வருசம்)2°, வனவிலங்கியல்21 மச்சவியல்: இவை நாகர்கோயில் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன.