பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

நியாய இலக்கணம்: இந்தத் தர்க்க சாத்திரம் யாழ்ப் பாணத்தவரான வில்லியம் நெவின்ஸ்” என்பவரால் எழுதப்பட்டு, யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டது.

அங்காதிபாதம்23: கிரீன்24 என்பவர் எழுதியது; 1872-இல் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டது. அருமையான சிறந்த நூல்.

மருந்துச் சரக்குகளின் பெயர்25: இதுவும் கிரீன் என்பவர் எழுதியது; 1875-இல் நாகர்கோயில் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.

இரசாயன முதல் நூல்26 பவர் ஐயரால் எழுதப்பட்ட ரசாயன நூல். கெமிஸ்தம்27: கிரீன் வைத்தியர் இயற்றியது. 1875-ஆம் ஆண்டில் நாகர்கோயிலில் அச்சிடப்பட்டது. வான சாத்திரம், சுகரணவாதம், உற்பாலனம் என்னும் நூல்களும் யாழ்ப்பாணத்தில் அச்சிடப் பட்டன. தமிழில் எழுதப்பட்ட விஞ்ஞான நூல்களின் முழு விவரமும் எமக்குக் கிடைக்காதபடியால், எமக்குத் தெரிந்தவரையில் சுருக்கமாக எழுதப்பட்டது.

அடிக்குறிப்புகள்

1. The South Indian Christian School Book Society.

2. Guthrie

3. Grammar of Geography

4. History of Rome

5. History of Great Britain

6. Ouline of Ancient History

7. Outline of General History

8. Dr. Schmid

9. Universal History