பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -17

இவ்வாறு முந்நூறு ஆண்டுகளாக நமது நாட்டிற் போர்ச்சுகீசு மொழி ஒருவகையிற் பொதுமொழியாக வழங்கிவந்தபடியால், அம்மொழிச் சொற்கள்மட்டும் தமிழிற் கலக்க, மற்ற ஐரோப்பிய மொழிச் சொற்கள் கலக்க இடமில்லாதபடி போயின. போர்ச்சுகீசு மொழிச் சொற்கள் சில தமிழில் வழங்குவதற்கு இதுவே காரணமாகும். தமிழில் வழங்கும் போர்ச்சுகீசுத் திசைச்சொற்கள் இன்னின்னவை என்பதை ஆராய்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் உயர்திரு. ஞானப்பிரகாச சுவாமிகள், O.M.I., ஆங்கிலப் பத்திரிகையொன்றில்2 ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். சுவாமிகளின் உத்தரவு பெற்று அக்கட்டுரையிலிருந்து தமிழில் வழங்கும் பறங்கிச் சொற்கள் சிலவற்றைக் கீழே தருகிறோம்.

6

8

3

9

அன்னாசி அல்லது அன்னதாழை, கொய்யா, பப்பாய் (பப்பளி), வாத்து, குசினி, பீங்கான், கோப்பை, விசுக்கோத்து, அரக்கு,4 கமிசு, சப்பாத்து, பாப்பூசு, பொத்தான், அலுப்புநேத்தி, மேசை, கதிரை5 வாங்கு புனல், கடுதாசி, பேனா, கிராதி, விராந்தை, சிமேந்து பீப்பா, மேஸ்திரி, கப்பித்தான், ஆயா (செவிலித்தாய்)° பாதிரி, விசுப்பு" பாப்பு12 பட்டாளம், துருப்பு, சிப்பாய், துப்பாக்கி, வயினாத்து,13 கும்பாசு, நங்கூரம், சாவி, ஏலம், ரசீது, ஆசுபத்திரி, இஸ்கூல், கும்பாதிரி,4 கும்மாதிரி, விவிலியம், பட்டாசு, சன்னல் முதலியன.

16

15

உயர்திரு.ஞானப்பிரகாச சுவாமிகள் ஆராய்ந்தெழுதிய பறங்கிச் சொற்கள் அத்தனையும் இங்குக் காட்டப்படவில்லை. அவர்கள் எழுதியவற்றில் ஒரு சிலவற்றைமட்டும் மேலே குறிப்பிட்டோம். தமிழில் வழங்கும் எல்லாப் பறங்கிச் சொற்களையும் அறிய விரும்புவோர் மேலே சொன்ன ஆங்கிலப்பத்திரிகையைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். அப் பறங்கித் திசைச்சொற்களிற் சில மட்டும் எல்லாத் தமிழர்களாலும் வழங்கப்படுகின்றன. சில சொற்கள் கிறித்துவத் தமிழர்களால் வழங்கப்படுகின்றன. மற்றுஞ் சில இலங்கைத் தமிழர்களிடையே வழங்குகின்றன. அவற்றில் இப்போது வழக் கொழிந்தனவும் சில உண்டு.