பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. செய்தித்தாள் முதலிய வெளியீடுகள்

செய்தித்தாள்கள், கிழமைத்தாள், திங்கள்தாள் முதலிய வெளியீடுகள் முதன்முதல் ஐரோப்பாவில் தோன்றின. பிறகுதான் ஏனைய நாடுகளில் இவைகள் பரவின. தமிழ்நாட்டில், “மிசன்” என்னும் கிறித்துவப் பிரசார சங்கங்களின் மூலமாக, முதல் முதல் செய்தித் தாள்கள் வெளிப்படலாயின. சென்ற 19-ஆம் நூற்றாண்டில், அஃதாவது 1831-ஆம் ஆண்டில், முதன் முதல் ஒரு திங்கள்தாள் வெளிவந்தது. இதுதான் தமிழ்நாட்டில் தோன்றிய முதல்தாள் எனத் தோன்றுகிறது. அதுமுதல் பல தாள்கள் தோன்றி உலாவிவருகின்றன. சென்ற நூற்றாண்டில், தமிழ்நாட்டில் உலாவிய தாள்களின் சுருக்கமான வரலாற்றை எமது ஆராய்ச்சிக்கு எட்டிய வரையிற் கீழே தருகிறோம்.

992

தமிழ்த்தாள்' என்னும் பெயருள்ள ஒருமாத வெளியீடு 1831-முதல் “சென்னை மதத் துண்டுப் பிரசுரக் கழகம் என்னும் சங்கத்தாரால் சென்னையில் வெளியிடப்பட்டது. இத் தாளின் தமிழ்ப்பெயர் யாதென்று திட்டமாகத் தெரியவில்லை. இதுதான் தமிழில் முதன் முதல் வெளிவந்த மாதத்தாள் எனத் தோன்றுகிறது. இஃது 1846-ஆம் ஆண்டு வரையில் நடைபெற்று வந்தது. பிறகு மேற்படி ஆண்டில் மாதம் இருமுறை வெளியீடாக மாற்றப்பட்டது. ஆனால், ஆறு மாதத்திற்குப் பின்னர் நிறுத்தப்பட்டது.

சுவிசேச பிரபல விளக்கம் என்பது ஒரு மாத வெளியீடு. 1840- முதல் திருவாங்கூரைச் சேர்ந்த நாகர்கோயில் என்னுமிடத்திலிருந்த பிரசார சபையரால் வெளியிடப்பட்டது. இதே ஆண்டில், நற்போதகம் என்னும் மாத வெளியீடு, திருநெல்வேலியைச் சேர்ந்த பாளையங் கோட்டைப் பிரசார சபையாரால் வெளியிடப்பட்டது. இதே ஆண்டில், பால தீபிகை என்னும் தாள் சிறுவருக்காக நாகர்கோயிற் பிரசார சபையரால் வெளியிடப்பட்டது. மூன்று மாதத்திற்கொருமுறையாக வெளியிடப்பட்ட இஃது 1852-ஆம் ஆண்டு வரையில் நடைபெற்று வந்தது.