பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

77

சன சினேகன் என்னும் தாள் 1841-முதல் சென்னையில் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. இது செய்தித்தாள் என்று மட்டும் தெரிகிறதேயன்றறி, யாரால் வெளியிட்டபட்டதென்று தெரியவில்லை. இது மாதமிருமுறை வெளியீடாக நிலவிநின்றது. 1847இல் திராவிட தீபிகை என்னும் தாள் வெளிப்படத் தொடங்கிற்று, இஃது யாரால் வெளிப்பட்டதென்றும், மாதவெளியீடா, கிழமை வெளியீடா என்றும் தெரியவில்லை.

ஆம்

உதய தாரகை யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிசன் சார்பாக 1841-

ஆண்டு முதல் வெளிவருகிற மாதத்தாள். இதில்

ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. ஆங்கிலப் பகுதிக்கு என்ரி மார்டின் என்பவரும், தமிழ்ப்பகுதிக்குச் செத் பேசன்' என்பவரும் முதன்முதல் இதழாசிரியர்களாக இருந்தனர். இத்தாள் இன்றும் நடைபெற்று வருகிறது.

சிறுபிள்ளையின் நேசத்தோழன் என்னும் தாள் சிறுவர்களின் பொருட்டு 1849-ஆம் ஆண்டு முதல் பாளையங் கோட்டைப் பிரசார சபையாரால் வெளியிடப்பட்டு வந்தது.

தினவர்த்தமானி என்னும் செய்தித்தாளைப் பெர்ஸிவல் ஐயர் சென்னையில் 1856-முதல் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். இது கிழமைத் தாள். ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இத்தாளின் ஆசிரியராகச் சிறிது காலம் இருந்தார்கள்.

ஜில்லா கெஜட்டு என்னும் வார வெளியீடு 1856 முதல் சென்னை அரசாங்கத்தாரால் வெளியிடப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, ஆர்க்காடு, தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் முதலிய தமிழ்க் கோட்டங்களின் பொருட்டு இது தமிழில் வெளியிடப்படுகிறது.

மிசன்பாடசாலைத்தாள் என்னும் மாத வெளியீடு தென் இந்தியக் கிறித்தவப் பாடசாலைப் புத்தகச் சங்கத்தாரால் 1858 முதல் நடைபெற்றுவந்தது.

பாலியர் நேசன் மாணாக்கரின் பொருட்டு 1859 முதல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்தது.

தேசோபகாரி திருவாங்கூரைச் சேர்ந்த நெய்யூர்ப் பிரசார சபையரால் 1861-முதல் நடைபெற்றுவந்தது. இது சித்திரப் படங்களுடன்