பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

81

5.

6.

ம் ம் ய

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா?

ஒரு சுருட்டுப் பத்து நாள் பிடிப்பான்

குண்டுபட்டுச் சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம். குண்டு போனவிடத்தில் குருவி நேர்ந்தது

குண்டுமில்லாமல் மருந்துமில்லாமல் குருவி சுடலாமா? தண்ட சோற்றுக்காரா, குண்டு போட்டால் வாடா

தண்டுக்கு ரொட்டி சுட்டுப் போடுகிறவள்.

தாடி பற்றிக் கொண்டு எரியச்சே சுருட்டுக்கு நெருப்புக் கேட்கிறான்.

தீர்க்கதரிசி பீங்கான் திருடி

துப்பாக்கியிலே பீரங்கி பறந்தது போல

பங்காளி வீடு வேகிறபோது சுங்கான்கொண்டு தண்ணீர் விடு. 16. ராங்கி' மிஞ்சி ரூம்~ தேடுகிறது; ஆக்கிப்போட ஆள் தேடுகிறது. தமிழ்நாட்டில் வழங்கிவந்த பழமொழிகளில் நானூறு பழ மொழிகளை மட்டுந் திரட்டி, சுமார் ஆயிரத்திருநூறு ஆண்டு களுக்கு முன்னே, முன்றுறையரையர் என்னும் சமண சமயத்தைச் சேர்ந்த ஆசிரியர் பழமொழி நானூறு என்னும் பெயருடன் வெண்பா யாப்பில் ஒரு நூல் இயற்றினார். அவருக்குப் பிறகு, புதியன புதியனவாகப் பன்னூற்றுக் கணக்காகப் பழமொழிகள் தமிழில் உண்டாகி வழங்கி வருகின்றன. அவற்றையெல்லாம் ஒருங்கு திரட்டிப் புத்தகமாக அமைக்க ஒருவரும் முற்பட்டிலர். சென்ற நூற்றாண்டில், யாழ்ப்பாணத்திலும், பிறகு சென்னையிலும் வாழ்ந்திருந்த பீட்டர் பெர்ஸிவல் ஐயர் என்னும் பாதிரியார் தமிழில் வழங்கும் பழமொழிகளையெல்லாம் திரட்டி அச்சிற் பதிப்பித்த செய்தி இங்குக் குறிப்பிடத்தக்கது. இப்புத்தகத்தில் 1873 பழமொழிகள் திரட்டிச் சேர்க்கப்பட்டன. இப்புத்தகம் 1843-ஆம் ஆ ண்டில் யாழ்ப்பாணப் புத்தகச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. “பழமொழி நானூறு"க்குப் பிறகு, புத்தக உருவமாகத் தொகுத் தெழுதப்பட்ட பழமொழி நூல் இதுவே. இதற்குப் பிறகு, சிலர் தமிழ்ப் பழமொழிகளைத் திரட்டி அச்சிட்டிருக்கிறார்கள்.

1. Rank

அடிக்குறிப்புகள்

2. Room