பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

/ 83

தத்துவ போதக சுவாமி மதுரையில் வாழ்ந்துவந்தார். தமிழ், சமஸ்கிருதம் என்னும் மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, அவ் விருமொழிகளிலும் நன்றாகப் பேசவும், சொற்பொழிவு நிகழ்த்தவும், நூல் இயற்றவும் வல்லவராயிருந்தார். இவருடைய போதனைகளைக்கேட்க நாள்தோறும் பெருந்திரளான மக்கள் இவரிடம் வருவார்கள். சம்ஸ்கிருத மொழியில் தேர்ந்தவராகையால், கிறித்துமதச் சார்பாகச் சில சுலோகங்களை எழுதிவைத்துக்கொண்டு, அவை ஏசுரவேதம் என்பதாகவும், கடவுளாற் செய்யப்பட்டன என்பதாகவும், ஐந்தாம் வேதமாகிய அதனை உரோமாபுரியிலிருந்து தாம் கொண்டு வந்ததாகவும் சொல்ல, அதனைப்பிராமணர் முதலாக எல்லோரும் உண்மை என்றே நம்பிவந்தனர். இவர் இவ்வாறெல்லாம் கோலத்தை மாற்றியதும், மாறுபாடான சில காரியங்களைச் செய்ததும் சுய நலத்தின் பொருட்டன்று. தாம் உண்மை மதம் என்று நம்பிய கிறித்துமதத்தில், இந்துக்களைச் சேர்த்து, அவர்களையும் உய்விக்கவேண்டும் என்னும் நன்னோக்கம்பற்றியே. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது ஆன்றோரின் கொள்கையன்றோ? இவ்விதம் இவர் மதுரையில் வாழ்ந்திருந்த காலத்தில், இவரைப் பற்றிக் கேள்வியுற்ற மதுரை நாயக்க மன்னன் இவரைத் தன் அரண்மனைக்கு அழைத்தான். னால், இவர் அங்குச் செல்ல மறுத்துவிட்டார்.

தத்துவ போதக சுவாமி அனேக பிராமணர்களையும் “உயர்குல" இந்துக்களையும் கிறித்தவராக்கினார். ஆனால், மதம் மாறிய அவர்கள் சந்தனம் அணிதல், பூணூல் தரித்தல், குடுமி வளர்த்தல் முதலிய இந்துக்களின் வழக்கங்களை விடவில்லை; இவரும் அவற்றை விடும்படி சொல்லவில்லை. இதைக்கண்டு மற்ற கிறித்தவ மதபோதகர்கள் இவருடைய செய்கையைக் கண்டித்து, கொச்சியில் இருந்த கிறித்தவ மத மேலதிகாரிக்குத் தெரிவித்துக் கொண்டார்கள். அந்த அதிகாரி இவரை அழைத்து உசாவுதல் செய்தார். இந்த உசாவுதல் பல ஆண்டுவரையில் நடைபெற்றது. கடைசியாக, உரோமாபுரியில் உள்ள போப் என்னும் மதத் தலைவர் இவர் செய்தது தவறல்ல என்று தீர்ப்பளித்தார். ஆயினும், இந்த உசாவுதலின் பயனாக, இவரது பிற்கால வாழ்க்கை துன்பமாக முடிந்தது.

தத்துவ போதக சுவாமி மேற்சொன்ன உசாவுதலின் பொருட்டு அடிக்கடி கொச்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்த காலத்தில், மதுரையில் இருந்த இந்துக்களுக்கு இவரது இவரது உண்மை நிலை