பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

/ 85

1) ஞானோபதேச காண்டம் 2) மந்திர மாலை 3) ஆத்தும நிர்ணயம் 4) தூஷண திக்காரம் 5) சத்திய வேத லக்ஷணம் 6) சகுண நிவாரணம் 7) பரம சூட்சுமாபிப் பிராயம் 8) கடவுணிருணயம் 9) புனர் ஜென்ம ஆட்சேபம் 10) நித்திய ஜீவன் சல்லாபம் 11) தத்துவக் கண்ணாடி 12)ஏசுநாதர் சரித்திரம் 13) தவசுச் சதம் 14) ஞானதீபிகை 15) நீதிச்சொல் 16) அநித்திய நித்திய வித்தியாசம் 17) பிரபஞ்ச விரோத வித்தியாசம் 18) தமிழ் போர்ச்சுகீச அகராதி.

66

தத்துவ போதக சுவாமியின் உரைநடையைக்காட்டும் பொருட்டு, அவர் இயற்றிய ஞானோபதேச காண்ட”த்திலிருந்து இரண்டு பகுதிகளைக் கீழே தருகிறோம்.

66

'இதிலே அவசியமா யறியவேண்டிய வொரு விசேஷ முண்டு. அதேதென்றாற் காரணமானது காரியத்துக்கு' நன்மையெல்லாங் கொடுக்கின்ற தென்கிறது. காரியத்தைக் காரணமான துண்டாக்கு கிறதென்று சொல்லப்படும். காரணத்திலே கொடுக்கப்படுகிற நன்மை காரியத்திலே இரண்டுவகையா யிருக்கலாம். ஒருவகையாவது : காரியத்திலே யிருக்கிறதெல்லாங் காரணத்திலே சரியாயிருக்கிறது. இந்த வகையிலே அக்கினி அக்கினியைச் செனிப்பிக்கும். சிங்கத்தைச் சிங்கமானது பிறப்பிக்கும். மனுஷனும் மனுஷனைப் பிறப்பிப்பான். இப்படிப்பட்ட காரண காரியத்தை விசாரிக்கும் போது காரணத்திலே இருக்கிற நன்மையெல்லாங் காரியத்திலே சரியாயிருக்கிற தொழிய ஏற்றக் குறைச்சலா யிராது. இப்படிப்பட்ட காரண காரியத்தை அனுரூப காரணமென்றும் அனுரூப காரியமென்றுஞ் சொல்லத்தகும்.

66

3

2

"இப்படிப்பட்ட காரண காரியவகை தவிர வேறொரு காரண காரிய வகையுண்டு. அதை விசாரிக்குமிடத்திற் காரணத்திலே யிருக்கிற சுபாவமுஞ் சுபாவத்துக் கடுத்த எல்லா நன்மைகளுங் காரியத்திலே யிராமற் காரணத்திலேயிருக்கிற நன்மைகளுக்குள்ளே யாதாமென்று காரியத்திலே யிருக்கும். அதெப்படி யென்றால், சிற்பாசாரியானவ னொருவிக்கிரகத்தை யுண்டாக்கினான்; குலாலனா னவன் கலசபாத்திரத்தை வனைந்தான்; பூமியினுள்ளே விளைகிற மாணிக்கங்களுடைய வொளிக்குச் சூரியனானது காரணமாயிருக்கிறது. இந்த வகையுள்ள காரண காரியத்தைப் பார்க்கும்பொழுது காரணமாகிற சிற்பாசாரியிடத்திலே யிருக்கிற புத்தி பெல முதலான நன்மைகள் காரியமாகிற விக்கிரகத்திலேயிராமற் புத்திக்குள்ளேயிருக்கிற