பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

நன்மையாகிற ரூபம் விக்கிரகத்திலே யிருக்கிறதொழியச் சிற்பா சாரிக்குண்டான மற்ற நன்மையெல்லாம் விக்கிரகத்திலே யிராது. குலாலனிடத்திலேயிருக்கிற சாமர்த்திய முதலான நன்மைகள் பாத்திரத்திலேயிராமற் குலாலன் புத்திக்குள்ளேயிருக்கிற பாத்திர ரூபம் கலசத்திலே யிருக்குமேயொழிய மற்றப்படியல்ல. இத்தன்மையாகச் சூரியனிடத்திலேயிருக்கிற பலபல வகையுள்ள பலங்கள் மாணிக்கத் திடத்திலேயிராமல் ஒளி மாத்திரம் காணப்படும். ஆனபடியினாலே யிப்படிப்பட்ட காரண காரிய வகையை விசாரிக்குமிடத்திற் காரண மானது தன்னிடத்திலே யிருக்கிற நன்மையெல்லாம் காரியத்திற்குக் கொடாமல் தன்னிடத்திலே யிருக்கிற பலபல நன்மைகளுக்குள்ளே சில நன்மைகளை மாத்திரம் காரியத்துக்குக் கொடுக்கும். அப்படியே சிற்பாசாரியானவனும் குலாலனானவனும் தங்கள் தங்கள் புத்திக் குள்ளேயிருக்கிற ரூபங்களை விக்கிரகத்துக்கும் பாத்திரத்துக்கும் கொடுக்கிறார்களொழியத் தங்களுக்குண்டான மற்ற அனேக நன்மைகளைக் காரியத்துக்குக் கொடுக்கிறதில்லை. இந்த வடை வாகச் சூரியனானது தன்னிடத்திலேயிருக்கிற நன்மைகளெல்லாம் மாணிக்கங்களுக்குக் கொடாமல் ஒளிமாத்திரங் கொடுக்கிறது .... இந்த வகையாயுள்ள காரண காரியமானது அனுரூபமாகாத காரியமும் அனுரூபமாகாத காரணமுமென்று சொல்லத்தகும்.

66

وو

-ஞானோபதேசம்: முதற் காண்டம், 4-ம் பாடம்

ஆதிமனுஷனையும் அவனுக்குத் துணையாகக் கற்பித் தருளின ஸ்தீரியையும் பரிபூரண செல்வங்களைப் பொழிந்திருக்கிற வொரு ஸ்தலத்திலே நிறுத்திப் பூமியிலே யிருக்கிற மனுஷனுக்கு அப்படிப்பட்ட ஸ்தலத்தை விசேஷ ஸ்தலமா யிருக்கத் தக்கதாகக் கர்த்தாவானவர் கட்டளையிட்டருளினார்.'

"ஆகையினாலே அந்த ஸ்தலத்திலே நிர்மல ஜலமுள்ள பீசோன், சேயோன், திகிரீஸ், எவுபிறாத்தே என்ற நாலு நதிகள் பரவியோட, அவைகளுடைய தரங்கங்களின் வேகத்தினாலே புறத்திலே ஒதுக்கப்பட்ட வச்சிர வயிடூரியங்கள் விளங்க, புஷ்பராக முதலான கெம்பு ரத்தினங்கள் அங்கங்கே பிரகாசிக்க பச்சை, நீலம், மாணிக்கங்கள் அதினுடைய கரைகளைச் சிங்காரிக்க கோமேதகம், பவளம், முத்து முதலானவைகள் அங்கங்கே சுவாலித்திருக்க, ஒன்றோடொன்று பின்னினாற்போல அலைகள் கரையிலே மோத,