பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

"

கிறித்துவமும் தமிழும்

/87

அஞ்ச மிதுனங்கள் நீந்த, தாமரை நெய்தல் முதலான புஷ்பங்கள் சலத்தை யலங்கரிக்க, நானாவிதங்களான மச்சவினங்கள் நான்கெல்லையினு மோடித்திரிந்து விளையாட அப்படிப்பட்ட நதிகளுடைய மட்டோடு பரம்பியோடுகிற பிரவாகங்களினாலே அந்த ஸ்தலமானது மிகவும் மதுரமானதாக வேடிக்கையோடே பொருந்தி யிருக்கிற பற்பல விருக்ஷங்களோடு அலங்கரிக்கப்பட்டது மாயிருந்து, கர்த்தரானவர் தாமே யுண்டாக்கின. அப்படிப்பட்ட சிங்கார வனத்திலே கண்ணுக்குப் பிரியமானவைகளுமாய் பற்பல வர்ணங்களினாலே விளங்கப்பட்டவைகளுமாய் ஸ்பரிசத்துக்கு மிருதுவானவைகளுமாய் கனிந்த பழங்களுடைய பாரத்தினாலே கவிழ்ந்திருக்கிற கப்புக் கவர்களுள் விருக்ஷங்களுடைய சாலைகள் அங்கங்கே ஒழுங்காகக் காண்பித்திருக்க, பலபல வர்ணங்களைக் கொண்டிருக்கிற வாசனை யுள்ள புஷ்பங்கள் விகசித்திருக்க, அவைகள் உதிர்ந்து பட்டுப் பட்டவளி போல தரையெல்லாம் சிங்காரிக்க மலர்ந்திருக்கிற புஷ்பங் களிலே ஒழுகுந் தேனையும் வீசுகிற வாசனையையும் மதுகரங்கள் நுகர, எண்ணப்படாத பக்ஷி சாதிகள் காதுக்கின்பமாய் கூவுகிற குரல் களினாலே மதுரமான நாதகீதம் பண்ணுகின்றாற் போலே பாடிக் கொண்டிருக்க, மான், கலை, முயல், மரை, முதலான வேடிக்கையுள்ள மிருகங்கள் பயமில்லாமல் அங்கேயும் இங்கேயும் ஓடி விளையாட, சவாது கஸ்தூரி முதலான பரிமளங்களைப் பிறப்பிக்கிற மிருகங் களினாலே ஆகாசத்திலேயும் பூமியிலேயுஞ் சுகந்தங்கள் வீச, சிங்கம், புலி, கரடி முதலான துஷ்டமிருகங்கள் தமது துஷ்டகுண மென்னப்பட்ட யாவையும் மறந்து பயங்கர சொரூபியா யிராமல் சாந்த குணத்தைக் கொண்டிருந்து சாது மிருகங்களாய் அங்கேயு மிங்கேயுந் திரிய பலபல புஷ்பங்களுடைய மதுரமான பரிமளங்களை மதுகரங்கள் பானம் பண்ணுகிறாப்போலே யிருக்க, குளிர்ச்சியான தென்றல் வீச, சூரிய னானது தனது உக்கிரமான உஷ்ணத்தை மனுஷனிடத்திலே தைக்கப் பண்ணாமல் சகலத்துக்கும் மிதமான பிரகாசத்தைப் பரப்பப் பண்ண, தொங்குகிற மேற்கட்டிகள்போலே கவிழ்ந்திருக்கிற பரமண்டல மானது இரத்தின, மாணிக்கங்களைத் தோற்கடிப்பதுபோல நிரை நிரையே பதிக்கப்பட்ட நக்ஷத்திரங்களுடைய சொல்லப்படாத அலங்காரங் களினாலே விளக்கப்பட்டிருக்க, இதெல்லாம் மனுஷனா னவன் பார்த்துக் கர்த்தருடைய அளவறுக்கப்படாத பெலத்தையும் பரம சாமர்த்தியத்தையும் தப்பில்லாக் கிரமத்தையும் கொண்டிருக்கிற