பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமா முனிவர் (1680-1746)

(Father C.J. Beschi)

வீரமா முனிவர், தத்துவ போதக சுவாமியைப் போலவே, இத்தாலி தேசத்திற் பிறந்தவர். 'கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி என்பது இவரது இயற்பெயர். உரோமாபுரியிற் கல்விகற்றுத் தேர்ந்து, பின்னர் ஏசுவின் சபையிற் சேர்ந்து துறவு பூண்டார். பின்னர், தமிழ்நாட்டிற் சமய ஊழியஞ் செய்வதற்காக அனுப்பப்பட்டு, 1700-இல் நமது நாட்டிற்கு வந்தார். தத்துவ போதக சுவாமியைப் போலவே இவரும் மதுரையைத் தமது உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் இத்தாலி, இலத்தீன் மொழிகளை நன்கு கற்றவர். மதுரைக்கு வந்த பின்னர் தெலுங்கு சமஸ்கிருத மொழிகளையும் கற்றுக்கொண்டார். தமிழ்மொழியை நன்கு கற்று முழுத் தேர்ச்சியடைந்து அம்மொழியிற் செய்யுளிலும் உரைநடையிலும் நூல் இயற்றும் வல்லமை பெற்று விளங்கினார். அக்காலத்தில் மதுரையில் மிக்க சிறப்புடன் வாழ்ந்திருந்த சுப்பிரதீபக் கவிராயர் அவர்கள், இவருக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்களில் முதன்மையானவர் என்று சொல்லுகிறார்கள். தத்துவ போதகரைப்போலவே இவரும் இந்துத் துறவிக் கோலம் பூண்டு, புலாலுணவை நீக்கிச் “சைவ” உணவை உண்டு வந்தார். 1822-இல், முதல் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளையவர்கள் இவருடைய நடையுடை பாவனைகளை அப்புத்தகத்திற் கீழ்வருமாறு எழுதி யிருக்கிறார்.

66

இந்தத்தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச்சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும்பொழுது கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக்கொண்டு தலைக்குச் சூரியகாந்திப்