பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச்சோமன் போர்வை முக்காடு மிட்டுக் காலிற் பாதகுறடும் வ போட்டுக்கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும்போது பூங்காவி அங்கியும் பூங்காவி நடுக்கட்டும், வெள்ளைப் பாகையும் இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற் றம்பாக்கு மோதிரமும், கையிற்றண்டுக்கோலும் காலிற் சோடுடனும் வந்து பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக் கொத்திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடை பிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலித்தோலாசனத்தின் மேலுட்காருவார்.

திருச்சிராப்பள்ளிச் சீமையை அக்காலத்து அரசாண்டிருந்த சந்தா சாகிபு என்னும் நவாபைக் காண்பதற்காக வீரமாமுனிவர் இந்துஸ்தானி, பாரசீக மொழிகளை மூன்று மாதத்திற் கற்றுக் கொண்டாராம். பின்னர், சந்தா சாகிபைக் கண்டு பேசியபோது, அவர் இவருடைய கல்வியின் ஆழத்தையும் அறிவின் பரப்பினையுங் கண்டு மெச்சி, இவருக்கு “இஸ்மாத்தி சந்நியாசி” என்னும் பட்டம் அளித்து, ஆண்டுதோறும் பன்னிரண்டாயிரம் ரூபா வருமானமுள்ள ஊர்களை இனாமாகக் கொடுத்து, தம் பாட்டனார் சாதுலாகான் என்பவர் பயன்படுத்தி வந்த தந்தப் பல்லக்கையும் அளித்து அன்பு காட்டினார். அன்றியும், இவரைத் தமக்கு திவானாக (அமைச்சராகவும் அமர்த்திக் கொண்டார். வீரமா முனிவர் இந்த உத்தியோகத்தை ஏற்றுக்கொண்டு, 1740 வரையில் சந்தாசாகிபின் திவானாக இருந்தார். மேற்படி ஆண்டில் திருச்சிக்கோட்டையை மகாராட்டிர வீரர் முற்றுகையிட்டு சந்தாசாகிபைச் சிறைப்பிடித்துக் கொண்டு போய் விட்ட பின்னர், வீரமா முனிவர் திருநெல்வேலியில் உள்ள மணப்பாடு என்னும் ஊரிற் சென்று வாழ்ந்து வந்தார். கடைசியாக 1742-ஆம் ஆண்டில் அவ்வூரிற் காலமானார்.

வீரமா முனிவர் தமிழ் எழுத்தில் எகர ஒகரங்களுக்குச் சில திருத்தத்தை உண்டாக்கினார். பண்டைக் காலத்தில் எகர ஒகரக் குற்றெழுத்துக்களும், அவற்றில் நெட்டெழுத்துக்களும், ஒரே மாதிரி எழுதப்பட்டன. ஆகவே குற்றெழுத்துக்கும் நெட்டெழுத் துக்கும்