பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

93

எழுதுவதை நான் பார்த்ததில்லை; இது எழுதுவோரின் அசட்டைத் தனமாக இருக்கலாம். இந்த எகர ஒகரக் குற்றெழுத்து நெட்டெழுத்துக் களின் வேறுபாட்டை எளிதாகத் தெரிந்துகொள்வதற்கு வேறொரு வகையை நான் கண்டறிந்தேன் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அஃது இதுவாகும். குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரேமாதிரியாக எழுதப்பட்டு வருகிற கொம்பு என்று சொல்லப்படுகிற ()ெ இந்தக் குறியைக் குற்றெழுத்தைக் குறிப்பிடவும், இக் கொம்பையே மேலே சுழித்து ()ே இவ்விதமாக எழுதினால் நெட்டெழுத்தைக் குறிப் பிடவும் மாற்றி அமைத்தேன். உதாரணமாக மெய், மேய், பொய், போய் (இச்சொற்களில் கொம்பு மேலே சுழிக்கப்படாதவை குற்றெழுத்து; மேலே சுழிக்கப்பெற்றவை நெட்டெழுத்து) இந்த முறை ஒப்புக்கொள்ளப்பட்டு அநேகரால் வழங்கப்பட்டு வருகிறது. பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

وو

முதல்முதலில் தமிழில் அகராதி எழுதியவரும் வீரமாமுனிவர் தாம். பண்டைக் காலத்தில் நிகண்டுகள் செய்யுள் வடிவில் எழுதப் பட்டு வழங்கிவந்தன. இந் நிகண்டுகளை மாணவர் உருப்போட்டு மனப்பாடம் பண்ணிவைக்க வேண்டியிருந்தது. மனப்பாடம் பண்ணாவிட்டால் நிகண்டுகளினாற் பயனில்லை. அகராதி என்பது அத்தகையதன்று. பொருள் தெரியாத கடின சொற்களுக்கு அகராதி யைப் புரட்டிப்பார்த்து எளிதிற் பொருள் தெரிந்துகொள்ளலாம். இதுவே மாணவர் எளிதாக கற்பதற்கு ஏற்ற நல்ல முறை. அகராதி எழுதும் வழக்கம் ஐரோப்பியர்களுக்குரியது. அந்த முறையைத் தமிழருக்குக் காட்டியவர் வீரமாமுனிவரே. இவரால் எழுதப்பட்ட “சதுரகராதி தமிழில் எழுதப்பட்ட முதல் அகராதியாகும்: வீரமா முனிவருக்குத் “தைரியநாத சுவாமி” என்றும் பெயருண்டு. இவரியற்றிய நூல்களாவன:-

66

"தேம்பாவணி”: இதை 1726-இல் இயற்றினார். 1729-இல் இந்நூலுக்கு உரை எழுதினார். "திருக்காவலூர்க் கலம்பகம் ‘அடைக்கல மாலை”, “கலிவெண்பா”, “ ‘அன்னை அழுங்கல் அந்தாதி”, 'கித்தேரியம்மாள் அம்மானை” முதலியன இவர் இயற்றிய செய்யுள்

66

66

நூல்கள்.

66