பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

وو

"வேதியர் ஒழுக்கம்”, “வேத விளக்கம்”, “பேதக மறுத்தல்”, “ஞானம் உணர்த்தல்”, “திருச்சபைக் கணிதம்”, “வாமன் கதை’ 'பரமார்த்த குரு கதை” இவை இவர் இயற்றிய வசன நூல்கள்.

66

ம்

தொன்னூல் விளக்கம் : இது ஐந்திலக்கணங்களையும் கூறும் செந்தமிழ் இலக்கணம். "கொடுந்தமிழ் இலக்கணம் இஃது ஐரோப்பியப் பாதிரிகள் தமிழ் பேசக் கற்றுக் கொள்வதற்காக லத்தீன் பாஷையில் எழுதப்பட்டது.

“சதுரகராதி” இதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் அகராதி. வீரமாமுனிவர் இயற்றிய நூல்களிலிருந்து சில செய்யுள் களையும் உரைநடைகளையும் கீழே தருகிறோம். இம் மாபெரும் புலவரின் தமிழ்ப்புலமையை இவை நன்கு தெளிவுறுத்தும்.

"

இவர் இயற்றிய தொன்னூல் என்னும் இலக்கண நூலில் கலிப்பாவுக்கு உதாரணமாகக் கீழ்க்கண்ட செய்யுளை அமைத்தி ருக்கிறார். இச்செய்யுள் இவர் பிறந்த ஈத்த நன்னாட்டினை (இத்தாலி தேசத்தை) வருணிப்பதாக இருந்தும், தமிழ்க் கவிகளின் போக்கை யொட்டி அமைத்திருப்பது நோக்குக:

"சென்னாக நீர்பொழிய செல்வநிலைக் கறமுமிகப் பொன்னாக நீர்புரையப் புவனமெலாம் புரந்தாண்டே கருமேவும் வளைதவழுங் கமழ்வயற்பாய் பூந்தடஞ்சூழ் மருமேவு நிழற்சோலை மயின்மேவிக் களித்தாடக்

கரும்பொப்பச் செஞ்சாலிகாய்த்தலர்க்கைக் கடைச்சியரே சுரும்பொப்பச் சூழிரப்போர் துதித்துவப்ப வீந்தீந்து

மாலைதாழ் குழலசைய மணக்குரவை யொலித்தாட ஆலைதாழ் புனலொழுகி யலர்வனமுங் கனிபொழிலும்

மல்கிவளர் சிறப்போங்க வரையாச்சீர் மனம்வெறுப்ப நல்கிவள ரீத்தல நன்னாடு

கீழ்க்கண்ட செய்யுள்கள் “தேம்பாவணி” யிலிருந்து எடுக்கப்பட்டவை:-