பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-18

ஊராகச் சென்று, ஊர்களில் திருவிழா நடக்கும்போது இசைகளையும், நடனங்களையும் நிகழ்த்தினார்கள். அரசர், சிற்றரசர், பிரபுக்கள் முதலியவர்களிடம் சென்று இசைப் பாடல்களையும், ஆடல்களையும், நாடகங்களையும் நிகழ்த்திப் பரிசு பெற்றார்கள். அவர்கள் தமது கலை நிகழ்ச்சிகளில் யாழ், குழல், முழவு முதலிய இசைக் கருவிகளுடன் பதலையையும் வாசித்து வந்தார்கள்.

பிற்காலத்தில் யாழ், வங்கியம் முதலிய இசைக்கருவிகள் வழக்கிழந்து மறைந்துவிட்டன போலவே பதலையும் தமிழ் நாட்டி லிருந்து மறைந்துவிட்டது. ஆனால், அக்கருவி தபலா என்னும் பெயருடன் வட நாட்டில் இன்றும் வழங்கிவருகிறது.

66

பதலை என்னும் சொல் தபலா என்று மாறிவிட்டது என்று சொன்னால் மட்டும் போதுமா? பதலை தான் தபலா என்றாயிற்று என்பதற்குத் தக்க சான்று காட்ட வேண்டுமல்லவா? வெறும் பெயரைக் கொண்டு இரண்டும் ஒரே இசைக்கருவிதான் என்று எப்படி நம்புவது!" என்று கேட்கலாம். இதற்குச் சான்று காட்டுவோம்.

பாணர் இசைக்கலை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இசைக் விகளை எடுத்துக்கொண்டு போனதை நெடும்பல்லியத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்:

கரு

66

"நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச் செல்லாமோதில் சில்வளை விறலி

-(புறம் 64: 1-2)

என்று பாணன் விறலியிடம் கூறியதாக இச்செய்யுள் கூறுகிறது. இதில் யாழ், ஆகுளி (சிறுபறை), பதலை என்னும் இசைக் கருவிகள் கூறப்படுவது காண்க.

பாணர்கள் தங்கள் இசைக்கருவிகளைக் காவடிகளில், இரண்டு புறத்திலும் தொங்கவிட்டுள்ள கூடைகளில் வைத்துத் தோளின்மேல் சுமந்துகொண்டு போனார்கள் என்பதை ஔவையார் கூறுகின்றார்:

66

'ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத் தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கி

-

(புறம்: 103: 1-2)

என்று கூறுகின்றார். இதிலும் பதலை என்னும் கருவி கூறப்படுவது

காண்க.