பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல் - நீர்1

ஆல் என்னும் சொல் பல பொருளுடைய ஒரு சொல். ஆலமரம், ஆல் என்னும் அசைச்சொல். அலர்ந்த பூ, தண்ணீர், நஞ்சு (விஷம்) என்னும் பொருள்கள் இச்சொல்லுக்கு உண்டு. இந்தக் கட்டுரையிலே, தண்ணீர் என்னும் பொருள் உள்ள ஆல் என்னும் சொல்லைப்பற்றி ஆராய்வோம். ஆல் என்பதுடன் அம் விகுதியைச் சேர்த்து ஆலம் என்றும் இச்சொல்லை வழங்குவது உண்டு. தண்ணீர் என்னும் பொருள் உள்ள ஆல், ஆலம் என்னும் சொற்கள் தமிழ் மொழிக்கு மட்டும் உரியன அன்று. இந்தப் பழமையான சொல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகளுக்கெல்லாம் பொதுவானது. ஆல் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய வேறு சில சொற்கள் திராவிட இன மொழிகளில் வழங்கிவருகின்றன. ஆனால், ஆல் என்னும் வேர் (அடி)ச் சொல் மறைந்துவிட்டது. மறைந்துவிட்டது என்பதைவிட மறக்கப்பட்டது என்பதே சாலப் பொருத்தம். மறதி என்னும் நிலத்திலே ஆழத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து கிடக்கிற இச்சொல்லை அகழ்ந்து எடுத்து ஆராய்ந்து பார்ப்போம்.

66

ம்

இச்சொல்லைத் தமிழ் நிகண்டு நூல்களில் காண்கிறோம்.

“பூவும் நீரும் ஒருமரப் பெயரும் ஆழ்கடல் விடமும் ஆலமாகும்’

66

ஆலமே வடவிருக்கம், அடுநஞ்சொடு அலர்பூ நீராம்”

என்றும்,

66

'ஆலசைச் சொல்லும் புனலும் ஆலும் ஆமென் பதுவும் அல்லவென் பதுவும்

இன

-

(பிங்கல நிகண்டு)

(சூடாமணி நிகண்டு)