பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

பார்த்து 'நீ புவ்வா சாப்பிட்டாயா?' என்றும் ‘புவ்வா சாப்பிடு' என்றும் கூறுவதை இன்னும் பேச்சு வழக்கில் கேட்டு வருகிறோம். புவ்வா என்பது புகா என்பதன் திரிபு என்பது நன்கு தெரிகிறது.

தமிழில் வழங்குவது போலவே கன்னட மொழியிலும் புவ்வா (Buvaa) என்னும் சொல் குழந்தைகளின் பேச்சில் உணவு என்னும் பொருளில் வழங்கி வருகிறது. தெலுங்கு மொழியிலும் புவ்வா என்னுஞ் சொல், சோற்றுக்கும், உணவுக்கும் பெயராக வழங்கப்படுகிறது.

எனவே, தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று திராவிட இன மொழிகளில் பேச்சு வழக்காக வழங்கி வருகிற புவ்வா, பூவா என்னும் சொற்கள் புகா என்னும் சொல்லின் திரிபு என்பது விளங்குகின்றது.