பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடை

-

அடைக்காய்

அடை என்றால் இலை என்பது பொருள். அடை என்னுஞ் சொல் இலை என்னும் பொருளில் வழங்கி வந்ததைச் சங்க இலக்கியங் களில் காண்கிறோம். உதாரணமாகச் சிலவற்றைக் காட்டுவோம்.

'மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சி பாசடைப் பரப்பில் மன்மலர் இடைநின்று

ஒரு தனி யோங்கிய விரைமலர்த் தாமரை

-(மணி 4:7-9)

மாசு இல்லாமல் தெளிந்த மணிபோன்ற நீர் நிறைந்த குளத்திலே பசுமையாகப் படர்ந்துள்ள இலைப்பரப்பிலே பல மலர்களுக்கு இடையிலே நிமிர்ந்து நிற்கும் ஒப்பற்ற தாமரைப்பூ என்பது இதன் பொருள். இதில் பசுமையான தாமரை இலைகள் ‘பாசடை

எனப்பட்டன.

'செம்பொன் மாச்சீனைத் திருமணிப் பாசடைப் பைம்பூம் போதி'

-மணி. 28: 173-74)

பசும்பொன் நிறமுள்ள பெரிய கிளைகளையும் அழகிய மரகத மணி போன்ற பசுமையான இலைகளையும் உடைய அழகுள்ள அரச மரம் என்பது இதன் பொருள். இதில் இலை அடை என்று கூறப்பட்டது. 'புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்’

-

(புறம்.266:3)

துளைபொருந்திய தாள்களையுடைய ஆம்பலின் அகலமான இலையின் நிழல் என்பது இதன் பொருள். இங்கும் இலை, அடை என்று கூறப்பட்டுள்ளது.

·

'பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்'

'களிற்றுச் செவியன்ன பாசடை'

-(குறும்: 9:4)

-(குறும். 246 : 2)