பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

இலை என்றும் பொருள் உள்ள அடை என்னுஞ் சொல் பிறகு வெற்றிலைக்குச் சிறப்புப் பெயராக வழங்கப் பெற்று, பிறகு அச் சொல் அடைக்காய், அடைப்பம், அடைப்பைக்காரன், அடைகத்தி, அடை கர்த்தரி முதலிய சொற்களாக உருவடைந்து வழங்குவதைக் கண்டோம். ஆனால், இச்சொற்களுக் கெல்லாம் அடிச்சொல்லாக இருக்கும் அடை என்னுஞ் சொல் தமிழ் மொழியில் தவிர ஏனைய திராவிட இன மொழிகளில் இப்போது மறந்து விட்டது. அடை என்னும் இச்சொல் ஒரு காலத்தில் திராவிட இன மொழிகளில் வழங்கியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.