பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

உருகெழு மன்ன ராரெயில் கடந்த

நிணம்படு குருதிப் பெரும்பாட் டீரத்

தணங்குடை மரபி னருங்களந் தோறும்

வெள்வாய்க் கழுதை புல்லினம் பூட்டி

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் வைக லுழவ! வாழிய பெரிது!”

(புறம். 392)

பல்யானை செல்கெழு குட்டுவன் என்னும் சேரமன்னன், பகைவர் நாட்டை வென்று அந்நாடுகளைக் கழுதை ஏரினால் உழுத செய்தியைப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் கூறுகிறார் :

"நின்படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி’

66

"நின்படையாளர் சேர்ந்த மன்றம் கழுதையாலுழப்பட என்பது இதன் பழைய உரை.

சேரன்

(பதிற்றுப்பத்து : 3-ஆம் பத்து 5-ஆம் பாட்டு.) செங்குட்டுவன் வட நாட்டரசரை வென்று,

அவர்களுடைய கோட்டைகளில் கழுதையால் ஏர் உழுது தன் சினம் தீர்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது :

66

'வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கிக் கவடி வித்திய கழுதையேர் உழவன்

(நீர்ப்படைக் காதை, 225-226) இவை இலக்கியங்களில் உள்ள சான்றுகள். கல்வெட்டுச் சாசனங் களிலும் இச்செய்திக்குச் சான்றுகள் காணப்படுகின்றன. அவற்றைக் காட்டுவாம் :

1.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தாலுகா, திருப் புல்லாணியில் உள்ள சகந்நாத சுவாமி கோயில் சாசனம் :- சிதைந்துள்ள இந்தச் சாசனம், கோமாற பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர் காலத்தது. இதில், “கழுதை கொண்டுழுது கவடி விச்சி செம்பியனையெ ... ... கொண்டவன் தேவியரை என்று காணப்படுகிறது. S.I.I. Vol. VIII. No. 394.