பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

தூய்மையற்றோர், தாம் தூய்மையற்றவராக இருப்பதனாலே அஞ்சி விலகிப்போகிறார்கள்” என்பது பொருள்.

மதுரைக் காஞ்சியிலே,

"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் றொன்முது கடவுள் பின்னர் மேய

வரைதாழ் அருவிப் பொருப்பிற் பொருந

என வரும் அடிகளில் உள்ள கடவுள் என்னும் சொல்லுக்கு முனிவனாகிய அகத்தியன்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருக்கிறார். இவ்வாறு பொருள் கூறியதோடு அமையாமல், கலித் தொகையில் உள்ள கடவுட் பாட்டைச் சுட்டிக்காட்டி, “இருடிகளையும் கடவுள் என்று கூறியவாற்றானும் காண்க” என்று விளக்கம் கூறியிருக் கிறார். இவர் சுட்டிக்காட்டும் கலித்தொகைப் பாட்டு, மருதக்கலி 28ஆம் பாட்டாகும். இப்பாட்டில் தலைமகள், தலைமகனை நோக்கி, ‘நீர் யாண்டுச் சென்றிருந்தீர்?' என்று கேட்க, அவன் கடவுள் இடம் (முனிவர் இடம்) சென்று வந்தததாகக் கூறுகிறான். அவன் கூற்றை நம்பாத தலைவி, அவன் பரத்தையர் மாட்டுச் சென்றதாகக் கருதிச் சினந்து கூறுகிறாள். இப்பாட்டிலே முனிவரைக் கடவுள் என்று கூறுகிற பகுதி இவை.

66

'நன்றும் தடைஇய மென்றோளாய் கேட்டீவா யாயின் உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங் கடவுளர் கட்டங்கி னேன்

"பெரிதும் பெருத்த மெல்லிய தோளினை யுடையாய்! யான் கூறு கின்றதனைக் கேட்பாயின் கேள்; யாம் இருவரும் போய் உடனே துறவகத்திருக்கும் வாழ்க்கைக்கு உதவியாயிருக்கும் கடவுளரைக் கண்டு அவரிடத்தே தங்கினேன் என்றான்" (நச்சினார்க்கினியர் உரை). "முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கால்

66

இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய அக்கடவுள் மற்றக் கடவுள்

“பின்னை அந்தக் கடவுள், முத்தை யொக்கும் முறுவலை யுடையாய்! நாம் மணத்தைச் செய்ய இப்பொழுது முகுத்தமென்று அம்முகுத்தம் வாய்ப்பச் சொன்ன அந்தக் கடவுள் காண் (நச்சினார்க்கினியர் உரை)

என்றான்