பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

151

இதில், முற்றத் துறந்த முனிவர்களாகிய துறவிகள் கடவுள் என்று கூறப்பட்டது காண்க. இளங்கோ அடிகளும், முனிவர்களைக் கடவுளர் என்று கூறுகிறார்.

66

ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக் கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்

அந்தில் அரங்கத் தகன்பொழில் அகவயின் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி

மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்து

(சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், காடுகாண் காதை)

கோவலன் கண்ணகியரோடு மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள், இடை வழியிலே உறையூரில் தங்கி, அருக்க கடவுளை வணங்கி, பின்னர்த் துறவிகளாகிய கடவுளர் இடத்தில் உரையாடினார் என்னும் செய்தி இதில் கூறப்பட்டது. சிந்தாமணி நூலாரும்,

66

'காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தைபோல

மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி

-

(குணமாலையார் இலம்பகம் 1)

இதில் சூரியனுடைய உத்தராயண நிலையைக் கூறுகிறபோது வானத்தைத் துறவிகளின் மாசற்ற மனத்திற்கு உவமை கூறுகிறார். கூறுகிறவர் முனிவரைக் கடவுளர் என்னும் சொல்லால் குறிப்பிடுவது காண்க. மேலும்,

66

‘சுறவுக்கொடிக் கடவுளொடு காலற் றொலைத்தோய், எம் பிறவியறு கென்று பிறசிந்தை இலராகி

99

நறவுமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித் துறவுநெறிக் கடவுளடி தூபமொடு தொழுதார்

(முத்தியிலம்பகம் : மணியரும்பதம்)

சீவக மன்னன் அரசு துறந்து, துறவு பூண்டு, கேவல ஞானம் கைவரப் பெற்று, வீடுபேறடையும் நிலையில் இருந்த போது, விஞ்சையர் வந்து அவரைத் தொழுது வணங்கிய செய்தியை இச்செய்யுள் கூறுகிறது. இதில் துறவியாகிய சீவகனைக் கடவுள் என்று கூறியிருப்பது காண்க.

சூளாமணி என்னும் காவிய நூலாரும், கடவுள் என்னும் சொல்லை முனிவர் என்னும் பொருளில் வழங்கியுள்ளார்.

66

முனிவருள் பெரியவன் முகத்துநோக்கி, 'ஒன்று

இனிதுளது உணர்த்துவது அடிகள்' என்றலும்