பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

66

"தருமந்திகிரிப் படையிற் புவனத் திரயந்தனை யான்வாய் கருமக்கடலைச் சுவறக் கடையும் கடவுட் கணநாதா

153

இதற்குப் பழைய உரை வருமாறு: “தருமமாகிய சக்கரா யுதத்தினால் மூன்று உலகத்தையும் ஆள்பவனே! வினையாகிய சமுத் திரத்தை வற்றக் கடைகின்ற முனிகணங்களுக்கு நாயகனே!" இதில், முனிகணங்கள் கடவுட்கணம் எனக் கூறப்பட்டிருப்பது நோக்குக.

கம்பரும் தமது இராமாயணத்தில் இச்சொல்லை இப்பொருளில் வழங்கியுள்ளார்:

66

'வில்லாளர் ஆனார்க் கெல்லாம் மேலவன் விளித லோடும் செல்லாதிவ் விலங்கை வேந்தற் கரசெனக் களித்த தேவர் எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது

கொல்லாத விரதத் தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார்.

(உயுத்தகாண்டம், இந்திரசித்து வதைப்படலம்)

முற்றத் துறந்த முனிவர், கடவுளர் என்னும் பெயரால் வழங்கப் பட்டனர் என்பதை இதுகாறும் எடுத்துக்காட்டினோம். கடவுள் (முனிவர்) என்னும் சொல் வடமொழியில் தெய்வம் என்னும் பொருளில் வழங்கப் பட்டது போலும். அது தமிழில் முனிவர் என்னும் பொருளில் வழங்கப் பட்டுள்ளது. திருநாவுக்கரசர் தெய்வம் என்னும் சொல்லைக் கடவுள் (முனிவர்) என்னும் பொருளில் வழங்கியுள்ளார்.

66

முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்

முறைமுறையால் 'நந்தெய்வம்' என்று தீண்டித்

தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று

தவமென்று அவஞ்செய்து தக்க தோரார்

மலைமறிக் கச்சென்ற விலங்கைக் கோனை மதனழியச் செற்றசே வடியி னானை இலைமறித்த கொன்றையந் தாரான் தன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே

(திருவீரட்டானம், ஏழைத்தாண்டகம்)

இத்திருத்தாண்டகத்திலே, முலை மறைக்கப்பட்டு நீராடப் பெண்கள் (அதாவது, சமண சமயத்துப் பெண் துறவிகளாகிய ஆரியாங் கனைகள்) சமண முனிவரை 'எந்தெய்வம்' என்று கூறி வணங்கி னார்கள் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். ஈண்டுக் கடவுள் (முனிவர்) என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்கி யிருப்பது காண்க.