பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

66

'கான வேங்கைக் கீழோர் காரிகை தான்முலை இழந்து தனித்துயர் எய்தி வானவர் போற்ற மன்னொடுங் கூடி வானவர் போற்ற வானகம் பெற்றனன்

ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு

“கலிகெழு கூடல் கதழெரி மண்ட முலைமுகந் திருகிய மூவா மேனிப் பத்தினி.

99

157

- (காட்சிக்காதை 57-60)

(நீர்ப்படை 129)

(வரந்தருகாதை 149-151)

இவை, கண்ணகியார் முலைகுறைத்த செய்திகளைக் கூறும் சில பகுதிகளாகும். நற்றிணை என்னும் தொகை நூலிலேயும், பெண்மகள் ஒருத்தி தனது ஒரு முலையை அறுத்துக்கொண்ட செய்தி கூறப் படுகிறது. அந்நூலில், 216-ஆம் செய்யுளைப் பாடிய மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர், திருமாவுண்ணி என்னும் பெண்மணி தனது நகிலைக் குறைத்துக் கொண்ட செய்தியைக் கூறுகிறார். அச்செய்யுள் பகுதி இது :

66

"எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனி இதணத் தாங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற

ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி

நாலாயிரப் பிரபந்தத்திலேயும் ஸ்ரீ ஆண்டாள் என்னும் நாச்சியார் தாம் அருளிச்செய்த திருவாய் மொழியில், மங்கையர் நகில் குறைக்கும் செய்தியைக் கூறுகிறார். 13-ஆம் திருவாய்மொழி, 8-ஆம் செய்யுளில், கண்ணன் மீது காதல்கொண்ட தலைவி ஒருத்தி, கண்ணன் வந்து தனது காமத்தைத் தணிக்காவிட்டால், தன்னுடைய கொங்கைகளை வேரோடு பறித்தெறிவேன் என்று கூறுவதாக இச்செய்யுளை நாச்சியார் பாடியிருக்கிறார். அச்செய்யுள் இது :

66

“உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன்மார்பில் எறிந்துஎன் அழலைத் தீர்வேனே