பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

“உள்ளே உருகி நைவேனை உளளோ இவளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன்மார்பில் எறிந்துஎன் அழலைத் தீர்வேனே.

கொங்கையறுத்தல் அல்லது முலைகுறைத்தல் என்பதன் மறைபொருள், கற்புடை மங்கையரின் சிற்றின்ப வாழ்க்கை (தமது காதலர் தம்மைப் புறக்கணித்ததனாலே) அறுபட்டது என்பது எனக் கண்டோம். நற்றிணைச் செய்யுளும் இக்கருத்தையே வெளிப் படுத்துகிறது. திருமா வுண்ணி என்னும் பெயருள்ள கன்னிப்பெண், பண்டைக் காலத்து வழக்கப்படி வயல்களின் நடுவில் இருந்த ஒரு வேங்கை மரத்தின்மேல் அமைக்கப்பட்ட பரணில் தங்கி, தனது தந்தையின் நிலபுலன்களைக் காவல் காத்திருந்தாள். அவ்வமயம், முன் பின் அறியாத காளைப் பருவமுடைய ஒருவன் அங்கு வந்தான். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமாவுண்ணியும் அவ்வேதிலாளனும் காதல் மணம்புரிந்து இன்புற்றார்கள். பிறகு, அவ்வேதிலாளன் தான் ஊருக்குப் போய்த் திரும்பிவந்து உலகோர் அறிய அவளை மணம்செய்து கொள்ளுவதாகச் சொல்லிப் போய்விட்டான். ஆனால், அந்தோ! அவன் திரும்பி வரவே இல்லை. திருமாவுண்ணி, அவன் வருவான் வருவான் என்று நெடுநாள் காத்திருந்தும் அவன் வரவே இல்லை. கற்புடைய மங்கை யாகலின் வேறு மணம்செய்து கொள்ளவும் அவள் விரும்பவில்லை. அவனையே எண்ணி எண்ணி மனம் உருகினாள். அவ்வேதிலாளனோ வரவே இல்லை. அவளது இன்ப வாழ்க்கை, காதல் வாழ்வு அழிந்து விட்டது. ஆகவே, இவள் சிற்றின்பத்தை இழந்தவள் என்னும் கருத்தைக் குறிக்க ஒரு முலை இழந்த திருமாவுண்ணி என்று கூறப்பட்டாள்.

கூடி

ஈண்டு வாசகர் சற்று ஊன்றிப் பார்க்க வேண்டும். இருமுலை அறுத்த திருமாவுண்ணி என்று கூறாமல், ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி என்று கூறப்படுகிறாள். ஏன்? இவள்தான் விரும்பிய கணவனை வாய்க்கப்பெற்றாள். வாய்ந்த கணவனுடன் இன்புற்றாள். வாழ்க்கையின் இன்பத்தைச் சிறிது அனுபவித்தாள். ஆனால், விரைவிலேயே அவனால் புறக்கணிக்கப்பட்டாள். ஆகவே, இவள் ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி என்று கூறப்பட்டாள். உண்மையிலே, இவளுடைய ஒரு கொங்கையாகிய உறுப்பு அறுபட வில்லை; ஆ னால், இவளது சிற்றின்பவாழ்வு, மணவாழ்க்கை