பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

163

இத்தீராத் துயர் யாரால் உண்டாயிற்று? பாண்டிய மன்னனால்! பாண்டியன் ஆராயாமல் செய்த தவறு கண்ணகி யாரின் வாழ்வில் இடிவிழச் செய்தது. கண்ணகியார் மனம் வெடித்துப் புலம்பிய சோகக்குரல் கேட்டவர் மனத்தில் அவலச் சுவையை உண்டாக்கிற்று.

66.

“மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப

அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ “மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப அறனுடை மடவோய்! யான் அவலங்கொண் டழிவலோ “செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப

இம்மையும் இசையொரீஇ இனைத்தேங்கி அறிவலோ.

இனி, கண்ணகியார் உயிர் வாழ்வதினால் பயன் இல்லை. ஆனால், அவர் செய்ய வேண்டிய கடமை யொன்று அவர்முன் நிற்கின்றது. அஃது யாது? கள்ளன் என்னும் பழி, அநியாயமாகச் சுமத்தப்பட்ட பொய்ப்பழி, கோவலன் பெயரைக் கறைப்படுத்துகிறது. இந்தக் கறையை, அடாத பெரும்பழியை, நீக்காவிட்டால், உண்மையில் கோவலன் கள்ளன் என்றும், அவனைப் பாண்டியன் கொன்றது நீதி என்றும் மக்கள் கருதுவார்கள். கோவலனுக்கு ஏற்பட்டுள்ள பழியை நீக்கி, அவன் புகழை நிலைநிறுத்த வேண்டியவர் கண்ணகியார் ஒருவரே. பொற்சிலம்பைக் களவாடிய கள்வன் என்று ஊரார் பேசிக் கொள்வது, கண்ணகியாரை வாள்கொண்டறுப்பது போல் இருக்கிறது. தன் கணவன் குற்றம் அற்றவர் என்பதை நிலைநிறுத்துவதற்காக, தனியே வீட்டைவிட்டு வெளிவந்தறியாத கண்ணகியார் தன் பொற் சிலம்புடன் வெளிவருகிறார். வந்து, தன் கணவன், கோவலன் குற்றவாளியல்லன் என்பதை ஊராருக்குக் கூறுகிறார். அநியாயமாக அரசன் கோவலன்மேல் குற்றம் சாட்டிக் கொலைசெய்தான் என்று முறையிடுகிறார். மதுரை நகரத்திலே, கற்புடைப் பெண்டிரும், பெரியோர்களும் தெய்வமும் இல்லையோ என்று சொல்லி அழுகிறார். 'பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்? கொண்ட கொழுநன் உறுகுறை தாங்குறூஉம்

66

பெண்டிரும் உண்டுகொல், பெண்டிரும் உண்டுகொல்?

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்? ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்

சான்றோரும் உண்டுகொல், சான்றோரும் உண்டுகொல்?”