பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

"தெய்வமும் உண்டுகொல், தெய்வமும் உண்டுகொல்? வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டுகொல், தெய்வமும் உண்டுகொல்?'

இம்முறையீட்டைக் கேட்ட ஊரிலுள்ள ஆடவரும் பெண்டிரும் வந்து சூழ்கின்றனர். கொலையுண்டவன் காவிரிப்பூம் பட்டினத்துச் செல்வந்த னாகிய கோவலன் என்பதையும், முறையிடுகின்றவள் அவனது மனைவி கண்ணகி என்பதையும், இவர்கள் பேர்போன மாநாய்கன், மாசாத்துவன் என்னும் பெருஞ் செல்வர்களின் மக்கள் என்பதையும் அறிகின்றனர். ஆகவே, மதுரைமாநகரிலுள்ள ஆண், பெண் அனைவருக்கும் இவ்விஷயத்தில் உணர்ச்சியும், அக்கறையும் தோன்றுகின்றன. ஆத்திரம் உண்டாவதும் இயற்கையே. ஆனால், உண்மை என்ன என்பதை அறிய மக்கள் பொறுமையாக இருந்து, உணர்ச்சியை அடக்கிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணகியார் காற் சிலம்புடன் அரண்மனையடைந்து, அரசன் அவைக்களத்திலே பலரும் அறிய கோவலன் கள்ளன் அல்லன்; பழியற்றவன் என்பதை நிலைநிறுத்துகிறார். மன்னன் தன் தவற்றினை யுணர்ந்து, அப்போது உண்டான இருதயத்துடிப்பினால் இறந்துவிடுகிறான். கோவலனை அனியாயமாகக் கொன்றார்கள் என்னும் செய்தியும், ஓர் இளம்பெண் கணவனை இழந்து பரிதபிக்கும் காட்சியும் மக்களுக்கு ஆத்திரத்தை யுண்டாக்குகிறது. அவர்கள் அரண்மனைக்குத் (நகர் = அரண்மனை) தீயிடுகிறார்கள். அரண்மனை தீப்பிடித்து எரிகிறது. இதுவே கண்ணகியரின் வரலாறு.

கண்ணகியார் காதலனை இழந்து, அதனால் இன்ப வாழ்க்கையை யும் இழந்தபடியினாலே, அவர் ஒரு முலையிழந்தவர், ஒற்றைமுலைச்சி என்று கூறப்படுகிறார். நிற்க.

கண்ணகியார் தமது கொங்கையைத் திருகி எறிந்து மதுரையை அழித்தார் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவது உண்மை நிகழ்ச்சி யன்று. சிலப்பதிகாரம் காவிய நூலாகலின், இவ்வாறு கற்பனையாக இச்செய்தியை உருவகப்படுத்திக் கூறுகிறது.

66

99

‘முலைமுகந் திருகிய மூவாமேனிப் பத்தினி” என்றும்,

66

'முத்தார மார்பில் முலைமுகந் திருகி

நிலைகிளர் கூடல் நீளெரி யூட்டிய

பலர்புகழ் பத்தினி” என்றும்,