பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

66

"முதிரா முலைமுகத் தெழுந்த தீயின்

66

மதுரை மூதூர் மாநகர் சுட்டது” என்றும்

“இடமுலை கையாற் றிருகி மதுரை

வலமுறை மும்முறை வாரா வலம்வந்து மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள்” என்றும்,

"கலிகெழு கூடல் கதழெரி மண்ட

முலைமுகந் திருகிய மூவாமேனிப் பத்தினி

165

என்றும் சிலப்பதிகாரத்தில் கூறப்படுவன எல்லாம், அஃதாவது தனது முலையைப் பிய்த்து எறிந்தாள் என்பது எல்லாம், வெறும் கற்பனையே யன்றிப் பிறிதன்று. ஒரு பெண்மகள் எத்தகைய பெருந் துயரத்திற் குள்ளாயிருந்தாலும், தன் கொங்கையைப் பிய்த்தெறிவது உண்மையில் நடைபெறுவதொன்றன்று.

எனவே, கொங்கையறுத்தல் அல்லது முலைகுறைத்தல் என்பது இன்பவாழ்க்கையை இழந்தவள் என்னும் குறிப்புப் பொருளைத் தருகிற வழக்கு என்று தோன்றுகிறது.

பிள்ளைப்பேறு அற்ற இளமங்கையர் கணவனை இழந்தால், அல்லது கணவனால் துறக்கப்பட்டால் மாத்திரம் இவ்வாறு ஒரு முலையறுத்தவள், கொங்கைக்குறைத்தவள் என்று கூறப்பட்டன ரேயன்றி பிள்ளைப்பேறுபெற்ற பெண்மகளிர் இவ்வாறு கூறப்பட்டிலர் என்று ஊகித்தறிய வேண்டியிருக்கிறது. என்னை? திருமா வுண்ணியாரும், கண்ணகியாரும் பிள்ளைப்பேறற்ற இள மகளிர் ஆவர் என்பதை நோக்குங்கள். அன்றியும், கண்ணகியாரைக் கூறும்போது, முதிராமுலை குறைத்தாள் என்றும், முதிராமுலை முகத்தெழுந்த தீ என்றும், மொய்குழல் மங்கை முலைப்பூசல் என்றும் இளமை வயதைக் குறிக்கும் அடைமொழிகளால் ஆசிரியர் கூறுகிறார். அதற்கேற்ப இருபத்தினான்கு வயதுள்ள பிள்ளைப்பேறற்ற, கணவனால் துறக்கப் பட்ட இளமங்கை கண்ணகியார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

இதுகாறும் நாம் ஆராய்ந்தவற்றால், கொங்கைகுறைத்தல் என்பது உண்மையில் கொங்கையைப் பிய்ப்பது அன்று என்றும், பிள்ளைப் பேறு பெறுவதற்கு முன்பே கணவனால் துறக்கப்பட்ட இளமங்கையர் என்பது இதன் கருத்து என்றும் கண்டோம். இதுவே