பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

171

அவளுடைய பரிவான கேள்வியிலிருந்து அவளுடைய மனோ நிலையை அந்தப் பெரியவர்கள் உணர்ந்தார்கள். மனவமைதியை உண்டாக்கவும், உலக இயற்கையை விளக்கவும் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

“ஆம். கண்டோம். இளங்குமரியும், காளைவாலிபனும் இவ் வழியே போகிறதைப் பார்த்தோம். அந்த இளமங்கையின் தாயார் போலக் காணப்படுகிறீர். அவர்களுக்காகக் கவலையுற வேண்டா. அன்பினால் கட்டுண்ட அவர்கள் வாழ்க்கை இனிது செல்லும்."

66

"மலையுச்சியிலே சந்தன மரங்கள் வளர்கின்றன. சந்தன சாந்தின் நறுமணமும் இனிமையும் அதைப் பூசிக்கொள்கிறவர்களுக்கே அல்லாமல் அது பிறந்த மலைக்குப் பயன்படுகிறதில்லை. அதுபோல உன் மகளும் உனக்குப் பயன்படாள்.”

“கடலிலே வாழ்கிற சிப்பிகளில் முத்துகள் பிறக்கின்றன. முத்துகளை அணிந்து கொள்கிறவர்களுக்கு அல்லாமல் அவை கடலுக்குப் பயன்படுவதில்லை. அம்முத்தைப் போல உன் மகளும் உனக்குப் பயன்படமாட்டாள்; அவள் அந்தக் காளைக்குத் தான் பயன்படுவாள்.

“யாழை வாசித்தால், அதிலிருந்து இனிய இசை உண்டாக்கிக் கேட்கிறவர்களுக்கு இன்பமும், மகிழ்ச்சியும் உண்டாக்குகிறது. ஆனால் அவ் இசையினால் அதை உண்டாக்கிய யாழ் இன்பம் அடைகிற தில்லை. உன் மகளும் உனக்கு அத்தகையவளே.’

66

وو

'அவ்விளைஞர் இருவரும் நல்ல காதல் உள்ளம் படைத்தவர்கள். அவர்கள் வாழ்க்கை இயற்கையோடு பொருந்திய இனிய நல்ல அற வாழ்க்கையாக அமைந்துள்ளது. அன்னாய்! நீ அவர்களுக்காக வருந்தாதே. உனது வீடு நோக்கிச் செல்க” என்று இவ்வாறு அன்னை யின் கவலை தீர அறமொழி கூறித் தேற்றினார்கள். இச் செய்தியைப் பாலைக்கலியில், சேரமான் பெருங்கடுங்கோ இவ்வாறு அழகாகப் பாடுகிறார்.

66

‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்! நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே!