பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவை தாம் என்செய்யும்! தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே!

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை

யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்! சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே! என வாங்கு,

இறந்த கற்பினாட் கெவ்வம் படரன் மின்! சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

அறந்தலைப் பிரியா ஆறுமற் றதுவே.

சீவகசிந்தாமணிக் காவிய ஆசிரியரும் இதே கருத்தைக் கூறுகிறார். கலுழவேகன் என்னும் வித்தியாதர அரசனுக்கு காந்தருவதத்தை என்னும் மகள் பிறந்தாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, அவளைக் கந்தருவர் மணம்புரியார் என்றும் மண்ணுலகத்தில் உள்ள அரசகுமாரன் மணம் செய்வான் என்றும் நிமித்திகர் கூறினார்கள். ஆகவே, ஸ்ரீதத்தன் என்னும் ஒருவாணிகனின் பொறுப்பில் காந்தருவ தத்தையைக் கலுழவேகன் மண்ணுலகத்துக்கு அனுப்புகிறான். மணமகளாகிய காந்தருவதத்தை, தன் தோழியருடன் புறப்பட்டுத் தன் தாயாகிய தாரணிதேவியை வணங்குகிறாள். மகளின் பிரிவைப் பொறுக்கமுடியாமல் தாயாகிய தாரணிதேவி மனம் வருந்துகிறாள். அப்போது கலுழவேகன், அவளுக்கு இவ்வாறு அறிவுரை கூறி அவள் கவலையை நீக்கியதாகத் திருத்தக்கதேவர் இவ்வாறு செய்யுள் அமைக்கிறார்.

66

“வலம்புரி ஈன்ற முத்தம் மண்மிசை யவர்கட் கல்லால்

வலம்புரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன நலம்புரிந் தனைய காதற் றேவிதன் நவையை நீக்கக் குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறினானே'

இதன் பொருள் : நலம் வடிவு கொண்டதுபோன்ற தேவியினுடைய வருத்தத்தை நீக்க 'வலம்புரிச் சங்கு ஈன்ற முத்தம் மண்ணுலகத் தில் உள்ளவருக்குப் பயன்படுவதல்லாமல், அதனால் வலம்புரிச் பயனையடையாது; மகளிரும் தாயருக்கு அத்

சங்கு

தன்மையரே' என்று கூறினான் என்பது.