பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

இவ்வழக்கத்தின் காரணம், பிறர் கொடுக்க வாங்கினால், தாம் என்னும் கருத்தே என்பதும்

தலைவணங்கியதுபோலாகும்

தெரிகின்றன.

5.

சோழர் சாமந்த அரசர் தலைமேல் அடிவைத்து யானை ஏறியது

சோழ அரசர் உலாப்போக யானைமேல் ஏறும்போது தமக்குக் கீழ்ப்பட்ட சாமந்த அரசரின் தலைமேல் கால்வைத்து யானைக்கழுத்தில் ஏறி அமர்வர் என்கிற செய்தி, குருபராம் பராப்ரபாவம் என்னும் நூலினால் தெரிகிறது.

"பின்னையுஞ் சில நாள் கழிந்தவாறே, ஒரு நாளளவில் (சோழ) அரசன் வந்து மன்னனாரை (வீரநாராயணபுரத்துப் பெருமாளை) சேவித்து மீண்டுபோகையில், தன்னுடைய சாமந்தன் தலைமேலடி யிட்டு ஆனைக்கழுத்தின் மீதேற அதை இவர் (நாதமுனிகள்) கண்டு, 'சர்வேஸ்வரன் பிரம்மாதி தேவர்கள் தலைமீது அடியிட்டுப் பெரிய திருவடி (கருடன்) மேற்கொள்ளும் படி இது வாகாதோ' வென்று மோகித்தா ரென்பதும் பிரசித்தம்” (ஸ்ரீ நாதமுனிகள் வைபவம்)

6.

சாமந்த அரசர் (சிற்றரசர்) பேரரசர் அரண்மனையில் உழக்கரிசி பெறுதல்

“சாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனக்க வுண்டாகிலும், மாளிகைக்குள்ளே செப்பாலே நாழி யரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்திருப்பார்களிறே”

இது, திருவாய்மொழி முதல் பத்து 3ஆம் திருவாய்மொழி 9ஆம் பாசுரத்தின் வியாக்கியானம்.

கப்பங் கட்டும் சிற்றரசர்களான சாமந்த அரசர்கள் தமக்கென்று நாடும் ஊரும் உடையவரேனும், தமது பேரரசனிடத்துச் சென்று, அவன் செம்பு நாழியாலே அளந்து கொடுக்கும் நாழி அரிசியைத் தமக்குரிய வரிசையாகப் பெற்றுவந்தனர் என்பது இதனால் அறியப்படுகிறது.

7.

66

மொட்டையடிப்பது

'காம்பறத் தலைசிரைத்(து) உன் கடைத்தலை யிருந்துவாழும் சோம்பரை உகத்திபோலும் சூழ்புனல் அரங்கத்தானே