பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

177

என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலை 38ஆம் பாசுரம். இதில் 'தலை சிரைத்து' என்பதற்குப் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானம் வருமாறு:

66

'தலைமயிராகிறதுதான் அபிமான ஹேதுவிறே. கோமுற்றவர் (?) தண்டிக்குமிடத்தில் தலையைச் சிரைக்கிறது. அபிமானத்தைப் போக்கு கிறதாய்த்து. ஏகாந்தியாயும் சந்நியாசியாயும் வபநம் பண்ணுகிறது. தன் அபிமானத்தைத் தானே போக்கிறபடியிறே தண்டமுகத்தாலே பிறரபிமானத்தைப் போக்குவதும் இம்முகத் தாலே; ஸ்வாபிமானத்தைப் போக்குவதும் இம்முகத்தாலே; ஸ்வாபிமானத்தைப் போக்குவதும் இம்முகத்தாலேயிறே ஆக, அஹங்கார கர்ப்பமான உபாயந்தர பரித்யாகத்தைச் சொன்னபடி

இதனால், குடுமி வைப்பது அக்காலத்தில் அபிமான கரமாகக் கருதப்பட்டதென்பது விளங்குகிறது.

8.

கொல்லிப்பாவை

பழைய சங்க நூல்களில் கொல்லிப்பாவையைப் பற்றிக் கூறப் படுகிறது. கொல்லி மலையில் இருந்த ஓர் அழகிய பெண் உருவமாகும் இது. சில உரையாசிரியர்கள், இக்கொல்லிப் பாவை ஒரு யக்ஷி தெய்வம் என்றும், அங்குச் செல்வோரை இது மயக்கி அழிக்கும் என்றும் கூறுவர். இந்த வியாக்கியானத்திலிருந்து, கொல்லிமலையில் எழுதப்பட்ட ஒரு சிற்ப உருவம் இது என்று தெரிகிறது. இக்கருத்துப் பொருத்தமுடைய தாகத் தோன்றுகிறது.

"குவளையங்கண்ணி கொல்லியம்பாவை” என்றும், "குலங்கெழு கொல்லி கோமள வல்லி” என்றும் திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் கொல்லிப் பாவையைக் குறிக்கிறார். இவற்றிற்கு வியாக்கியானம் இவ்வாறு கூறப்படுகிறது.

66

“கொல்லிமலை மேலே ஒரு பாவையுண்டு. எல்லாரும் உரு வகுப்புக்குத் தமிழர் சொல்லுவதொன்று.'

"பாவை யுண்டு என்றது ஸ்திரி பிரதிமை எழுதியிருக்கு மென்றபடி”- குறிப்புரை.

“கொல்லி மலையிலே ஒரு பாவையுண்டு; வகுப்பழகிதாயிருப்பது; அதுபோலேயாயிற்று இவளுக்குண்டான ஏற்றமும் பிறப்பும்."