பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரை

179

திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி முதற் பத்தின் 8ஆம் திருமொழியில், “செங்கயல் திளைக்கும் சுனைத்திரு வேங்கடம் அடை நெஞ்சமே" என்று அருளியதற்கு, மேற்கண்டவாறே பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் அருளியிருக்கிறார்; அதாவது:

66

"

'தமிழ்ப் பாழை நடமாடுகிறதுக்கும் எல்லையான நிலமா யிருக்குமிறே" (பாழை - பாஷை).

இதனால், அக்காலத்தில் திருவேங்கட மலையும் அதனைச் சார்ந்த நாடும் தமிழ்நாடாக இருந்ததென்பது தெரிகின்றது. பிற்காலத்தில் முகம்மதிய அரசர் விஜயநகர அரசரை வென்றபிறகு திருவேங்கடத் தில் தெலுங்கர் வந்து குடியேறினர் என்பது சரித்திரம் கூறுகிற வரலாறு.