பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் - அகம்*

அகப்பொருள் - விளக்கம்

-

மிகப் பழங்காலத்திலேயே இலக்கியத்தை அகம், புறம் என்று பழந்தமிழ்ச் சான்றோர் வகைப்படுத்தினர். அவற்றுள் அகப் பொருளுக்குச் சிறப்பு மிக்க முதலிடத்தை அவர்கள் கொடுத்தனர். இவ் வுலகில் ஆணும் பெண்ணும் அன்புடன் கூடிக்கலந்து, இன்புடன் இல்லற வாழ்க்கை நடத்துவதையே, அகம் என்று நம்முடைய முன்னோர்கள் போற்றினர். இக்காதல் வாழ்க்கையை அகப்பொருள் இலக்கண நூலார் அன்பின் ஐந்திணை என்பர். இப்பொருள் பற்றிய இலக்கியங்களைப் பண்டைத் தமிழ்ப்புலவர் மிகுதியாக இயற்றி யுள்ளனர். தலைவன் தலைவியரின் (காதலன் காதலியரின்) வாழ்க்கை யில் நிகழ்கின்ற காதற் செயல்களையும், எழுகின்ற உணர்வுகளையும் தம் கற்பனைத்திறனில் குழைத்து, சிறு சிறு சொல்லோவியங்களாகத் தொன்மைத் தமிழ்ப்புலவர்கள் தீட்டியுள்ளனர். பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம், அகப்பொருள் இலக்கணத்தைச் சிறப்பாக எடுத்தியம்புகிறது. அதற்குப் பிறகு, அகப்பொருள் இலக்கண நூல்கள் சில இயற்றப்பட்டுள்ளன.

அகப்பொருள்துறைச் செய்யுட்களைப் பாடுவதைச் சங்க காலத்துப் புலவர்கள் பெருமையாகக் கருதினர் எனலாம். இதனால் அகப்பொருள் செய்யுட்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பெரும் பகுதியாக உள்ளன. அப்பழஞ் செய்யுட்களைத் தொகுத்து அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை என்று புலவர்கள் போற்றிவந்தனர். அந்நூல்கள், நமக்குப் பழம்பேர் இலக்கியச் செல்வங்களாகக் கிடைத்திருக்கின்றன. தமிழ் மக்களின் காதல் உணர்வுகளையும், எண்ணங்களையும், செய்திகளையும் கலைநயந்தோன்ற எடுத்துரைக்கும் இப்பாடல்கள் யாவும் ஏறத்தாழக் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் இயற்றப்பட்டனவாகும்.

+

Journal of Studies, Vol. III, 1975.