பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

முருகன் சுவைத்த தமிழின்பம்

திருப்பரங்குன்றத்து முருகனைப் பரிபாடலின் ஒன்பதாம் செய்யுள் போற்றிப் புகழ்கிறது. இச்செய்யுள் முருகனுடைய அகப் பொருள் வாழ்க்கையைக் கூறுகிறது.

காதற் காமம் காமத்துச் சிறந்தது (பரி 9:14)

என்று குன்றம்பூதனார் காதற் காமத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறார். மேலும், அவர், அகப்பொருளையே 'தமிழ்' என்று போற்றுகிறார்:

தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார் கொள்ளார் இக்குன்று பயன். (பரி. 9:25-26)

இதற்கு உரையெழுதிய பரிமேலழகர்,

இப்புணர்ச்சியை வேண்டுகின்ற பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் (காதலர்) களவொழுக்கத்தைக் கொள்ள மாட்டார்கள்... இனி அக்களவிற் புணர்ச்சியை யுடைமையான் வள்ளி சிறந்தவாறும், அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார்கள்.4

என்று விளக்கம் தந்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும். இங்குச் சுட்டப்படும் ‘தமிழ்' என்னும் சொல், அகப்பொருளை உணர்த்துவ தாகப் பொருள் கொள்ளப்பட்டிருப்பது இங்கு நினைவுகூர்தற்குரியது. செந்தமிழின் சிறப்பு

பதினெண் கீழ்க்கணக்குள் ஐந்திணை ஐம்பது என்பது ஓர் அகப் பொருள் நூலாகும். இதை மாறன் பொறையனார் இயற்றியுள்ளார். இந்நூலும் அகப்பொருளைத் தமிழ் என்றே கூறுகிறது:

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்

செந்தமிழ் சேரா தவர். (ஐந்திணை ஐம்பது சிறப். பா.)

இச்செய்யுளுள் 'செந்தமிழ்' என்னும் சொல், அகப்பொருளையே சிறப்பாக உணர்த்துகிறது.

இறையனார் கண்ட தமிழ்

இறையனார் அகப்பொருள் உரையும், தமிழ் என்னும் சொல்லால் அகப்பொருளைச் சுட்டுகிறது. உரைப்பாயிரத்தின் தொடக்கத்திலுள்ள