பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

185

அடிக் குறிப்புகள்

1. ஆரிய அரசன் பிரகத்தன் தமிழ் கற்பதற்குக் கபிலர் தமிழ் இலக்கணம் எழுதினார் என்று சிலர் கருதுகின்றனர் (V.R.R. Dikshitar: Studies in Tamil Literature and History, P. 28). அதை நாம் ஏற்றுக்கொள்ள இயலாது. தமிழ் என்னும் சொல்லுக்கு, அகப்பொருள் என்னும் பொருளும் உண்டு என்பதை அறியாததால் தவறாகப் பொருள் கொண்டார்போலும்.

2. யாழோர் கந்தருவர்.

3. பிரகத்தன், பிரமதத்தன் என்னும் பெயர்கள் ஒருவனையே குறிப்பனவாகும்.

4.

பரிபாடல் 9, பரிமேலழகர் உரை, பக். 99.

5. இறையனார் அகப்பொருள் உரையுடன், கழகம், சென்னை, 1969;

பக். 14.

6. மேற்படி, பக். 85

7.

8.

சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும், உ.வே.சா. பதிப்பு; சென்னை, 1969: பக். 675.

யாப்பருங்கல விருத்தியுரை. S. பவானந்தம் பிள்ளை பதிப்பு, சென்னை, 1816; பக். 535.