பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தியார்*

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சீவக சிந்தாமணி புலத்துறை முற்றிய பேரறிஞர்களால் போற்றப்படும் சீரிய நூல் என்பது தமிழுலகம் அறிந்ததொன்றே. பல்லோராலும் பாராட்டப் படும் இச்சீவக சிந்தாமணியில் 445 பாடல்கள் இடைச் செருக லாகப் பிற்காலத்துச் சேர்க்கப்பட்டுள்ளன. புதிதாகப் புகுத்தப்பட்ட இடைச்செருகற் பாக்கள், நூலாசிரியராகிய திருத்தக்கதேவரின் நடையினின்று வேறு பிரிக்கக் கூடாதனவாய் இரண்டறக் கலந்து தோன்றும் சிறப்பு வாய்ந்தனவாக விருந்தலின், இன்ன பாக்கள் தாம் இடைச்செருகல் இன்னபாக்கள் தாம் பண்டைய முதல்பாக்கள் என்று பிரித்தறியக் கூடாதனவாய் இருக்கின்றன. இவ்வளவு திறமையுடன் இடைச்செருகற்பாக்களை இயற்றி நுழைத்தவர் கந்தியார் என்னும் பெரியார் என்று சொல்லு கிறார்கள். இந்தக் கந்தியாரைப் பற்றி யாதொரு செய்தியும் தெரிய வில்லை. ஆகவே, இந்தக் கந்தியார் என்பவர் யார்? எந்தச் சமயத்தவர்? ஆண்பாலரா, பெண்பாலரா? என்பனவற்றை ஆராய்வோம்.

கந்தியார் என்பது ஆர் விகுதிபெற்ற கந்தி என்னும் சொல். இது கௌந்தி என்னும் சொல்லின் திரிபு என்று தோற்றுகிறது. அன்றியும் கௌந்தி அல்லது கந்தி என்பது சமணரில் பெண் துறவிகளுக்குப் பெயர் என்றும் தெரிகிறது. நிகண்டு நூல்கள் இதனை வலியுறுத்து கின்றன.

66

'நந்திய பிண்டிவாமன் நன்னெறி வழாது நோற்பாள்

கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌந்தி என்ப

-

(சூடாமணி நிகண்டு-2வது: மக்கட்பெயர்த் தொகுதி)

இதனால் கந்தி, கௌந்தி என்னும் சொற்களும் அவ்வை, அம்மை, கன்னி என்னும் சொற்களும் அருகக்கடவுளைத் தொழும் அருந்தவப் பெண்பெயர் என்பது தெரிகிறது.

இனி, சூடாமணி நிகண்டிற்கும் முற்பட்ட பிங்கல நிகண்டும் இதையே கூறுகிறது:

  • செந்தமிழ்ச்செல்வி, 16:6,1937.