பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

66

'பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண்பெயர்’

189

-

- (பிங்கலம்-5-வது: ஆடவர் வகை.)

இதற்கும் முற்பட்ட சேந்தன் திவாகரமும் இதனையே வற்புறுத்துகிறது:

66

'பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண்பெயர்’

-

(திவாகரம் மக்கட் பெயர்த் தொகுதி)

சூடாமணி நிகண்டிலும், ஏனைய பிங்கலம், திவாகரம் என்னும் நிகண்டுகளிலும் இச்சொல்லைப் பற்றிக் காணப்படும் வேற்றுமை என்ன வென்றால், முற்கூறப்பட்ட சூடாமணி நிகண்டில் கந்தி, கௌந்தி என்னும் இரண்டு சொற்கள் கூறப்படுகின்றன; பிற்கூறப்பட்ட பிங்கலம் திவாகரங்கள் கௌந்தி என்னும் ஒரு சொல்லைமட்டும் கூறுகின்றன; கந்தி என்னும் சொல்லைக் கூறவில்லை. இதனால் நாம் அறியக் கிடப்பது என்னவென்றால் கௌந்தி என்னும் சொல் முற்காலத்தில் வழங்கி வந்தது என்பதும், பிற்காலத்து அச்சொல் கந்தி என்று மருவி வழங்கப்பட்டது என்பதுமேயாம், சிலப்பதிகாரக் காப்பியத்திலும் கௌந்தியடிகள் என்னும் சமண சமயத்துறவியாகிய ஓர் அம்மையாரைப் பற்றிக் கூறப்பட்டிருப்பது இங்கு நினைவு கூரற்பாலது. அந்தக் காப்பியத்தில் கௌந்தியடிகள் என்று கூறியிருப்பதும் கந்தி என்று ஓரிடத்தும் கூறாதிருப்பதும் கருதத்தக்கது. எனவே, கௌந்தி என்னும் சொல்லிலிருந்து தான் கந்தி என்னும் சொல் பிற்காலத்தில் மருவி வழங்கப்பட்டதென்று அறியக் கிடக்கின்றது. நிற்க.

கௌந்தி, கந்தி என்னும் சொற்கள் சமணசமயப் பெண்பாற் துறவிகளுக்கு மட்டுந்தான் பொருந்துமோ? ஏனைய சமயப் பெண்பாற் துறவிகளுக்குப் பொருந்தாதோ?

இந்த வினாவுக்கு விடை என்னவென்றால், இப்பெயர்கள் சமண சமயத்துப் பெண்பாற்றுறவிகளுக்கு மட்டுந்தான் பொருந்து மேயன்றி, ஏனைய சமயப் பெண்பாற்றுறவிகளுக்குப் பொருந்தாது என்பதே. னென்றால், இந்து மதத்தைச் சேர்ந்த சைவ வைணவ சமயங்களில் பெண்பாற்றுறவிகள் இல்லை. ஆனால், பௌத்த சமயத்தில் பெண்பாற் றுறவிகள் இல்லை. தமிழ் நாட்டிலும், பண்டைக்காலத்தில் பௌத்த மதம் செல்வாக்குப் பெற்றிருந்த போது, பௌத்த சமயப் பெண்பாற்றுறவிகள் இருந்தார்கள் என்று மணிமேகலை என்னும் காவியத்தினால் அறிகிறோம். எனினும், அவர்களுக்குப் பிக்குணிகள்