பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

நிகண்டனார், கலைக்கோட்டுத் தண்டனார்”*

“நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்” என்பவர் கடைச் சங்க காலத்திருந்த ஒரு புலவர். இவர் இயற்றிய செய்யுள் நற்றிணையில் 382-ம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. நற்றிணையை அச்சிற் பதிப்பித்த திருவாளர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் அவர்கள், "பாடினோர் வரலாறு” என்னும் தலைப்பின் கீழ் எழுதியுள்ள வரலாற்றில் இந்தப் புலவரைப் பற்றிக் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்கள்.

"மான்கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் கொண்டமையால் இவர் கலைக்கோட்டுத் தண்டனெனப்பட்டார். இவரது இயற்பெயர் புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டொன்று செய்தாரென்று தெரிகிறது; அதுவே கலைக்கோட்டுத் த ண்டெனப்படுவது. இதனை இடுகுறிப்பெயரெனக்கொண்டார். களவியலுரைகாரரும் நன்னூல் விருத்தியுரைகாரரும் (சூத்-49) அஃது

இதுகாறும் வெளிவந்திலது

وو

என

வை

இங்கு நாம் ஆராயத்தொடங்குவது “நிகண்டனார்” என்பது பற்றியே, மேலே காட்டப்பட்டபடி, திரு. அ. நாராயணசாமி ஐயர் அவர்கள், இப்புலவர் நிகண்டு ஒன்று செய்தமையால் இவருக்கு நிகண்டனார் என்று பெயர் சூட்டப்பட்டது என்று எழுதுகிறார்கள். களவியலுரைகாரரும், "செய்தானாற் பெயர்பெற்றன அகத்தியம், தொல்காப்பியமென இவை; செய்வித்தானாற் பெயர்பெற்றன சாதவாகனம், இளந்திரையம் என இவை; இடுகுறியாற் பெயர்பெற்றன, நிகண்டு, நூல், கலைக்கோட்டுத்தண்டு என்று எழுதியிருக்கிறார். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் "கலைக்கோட்டுத்தண்டு " ஒரு நூல் என்பது களவியல் உரையாசிரியர் கருத்து என்பதே. திரு. நாராயணசாமி ஐயர் அவர்கள் “நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்” என்னும் பெயரில் உள்ள “நிகண்டனார்” என்னும் அடை மொழியைக்கொண்டு களவியலுரைகாரர் குறிப்பிட்ட 'கலைக்கோட்டுத்தண்டு” என்னும் நூல் நிகண்டு நூல், என்று முடிவு *செந்தமிழ்ச்செல்வி, 1:6, 1938.

66