பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

கட்டியிருக்கின்றார்கள். இனி, நன்னூல் விருத்தியுரைகாரராகிய சங்கரநமச்சிவாயரும், நூற்பெயர் வகையைக் குறிக்கும் நன்னூல் 49-ம் சூத்திரத்திற்கு எழுதிய உரையில் “இடு குறியாற் பெயர்பெற்றன; நிகண்டு, கலைக்கோட்டுத்தண்டு முதலாயின” என்று களவிய லுரைகாரர் கருத்தையே தழுவி எழுதியிருக்கிறார்.

66

எனவே, களவியலுரைகாரரும், நன்னூல் விருத்தியுரை காரரும் 'கலைக்கோட்டுத்தண்டு” என்னும் ஒரு நூல் உளது என்றும், அன்னூற் பெயர் இடுகுறிப்பெயர் என்றும் கூறியுள்ளார். திரு. நாராயணசாமி ஐயரவர்கள், மேற்படி இரண்டு உரையாசிரியர்களும் குறிப்பிட்ட “கலைக்கோட்டுத்தண்டு” என்னும் நூல், நற்றிணையில் உள்ள 382-ம் பாட்டின் ஆசிரியராகிய கலைக்கோட்டுத்தண்டனார் என்பவரால் இயற்றப்பட்டதென்றும், “நிகண்டனார்” என்னும் அடைமொழியைக் காண்டு, கலைக்கோட்டுத்தண்டு என்னும் நூல் நிகண்டு நூலாக இருக்கவேண்டும் என்றும் எழுதியுள்ளார்கள்.

66

இதில் சில ஐயங்கள் தோன்றுகின்றன. நிகண்டு நூல் செய்தவரை நிகண்டனார்" என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமாகத் தோன்ற வில்லை. அவர் நிகண்டு நூல் செய்திருந்தால் “நிகண்டாசிரியர் என்றே கூறியிருப்பார்கள்; “நிகண்டனார்” என்று கூறியிருக்க மாட்டார்கள். ஆகையால், "நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்" என்று இருப்பதில் “நிகண்டனார்” என்னும் சொல்லுக்கு வேறுபொருள் இருக்கவேண்டும். அப்பொருள் யாது? அதனை ஆராய்வோம்.

சமணரில் “நிகண்டவாதிகள்” என்போர் ஒரு பிரிவினராவர். பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் சமணர்கள் இருந்திருக்கிறார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மணி மேகலையில், 27- வது “சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதையில்”, மணிமேகலை என்பவள் நிகண்டவாதியிடம் சென்று அவருடைய சமயக்கொள்கை யாது என வினவுகிறாள்.

66

"நிகண்டவாதியை நீயுரை; நின்னால்

புகழுந் தலைவன் யார்? நூற்பொருள் யாவை? அப்பொரு ணிகழ்வுங் கட்டும் வீடும்

மெய்ப்பட விளம்பென

(167-170)

என்று வரும் மணிமேகலையடிகளால் நிகண்டவாதிகள் தமிழ் நாட்டில் பண்டைக்காலத்தில் இருந்தது நன்கு விளங்குகிறது. எனவே