பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

66

193

"நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்” என்னும் பெயருக்குச் சமண மதத்தைச் சேர்ந்த நிகண்டவாதி கலைக் கோட்டுத்தண்டனார் என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமுடையது என்று தோன்றுகிறது. நிகண்டு நூல் செய்திருந்தாரானால், மேலே குறிப்பிட்ட படி, “நிகண்டாசிரியர்” என்று கூறியிருப்பார்களேயன்றி"நிகண்டனார்” என்று சொல்லியிருக்கமாட்டார்கள்.

அன்றியும், “கலைக்கோடடுத்தண்டு” என்னும் நிகண்டு நூல் கடைச்சங்ககாலத்தில் இயற்றப்பட்டிருந்தால், அதனைப் பிற்காலத்து நூல்களாகிய திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டு முதலிய நூல்களில் குறிப்பிட்டிருப்பார்களன்றோ? அவ்வாறு குறிப்பிடாதது பற்றி அவர் நிகண்டு செய்ததாகக் கொள்வதற்கில்லை. எனவே, கண்டனார்" என்னும் சொல்லுக்கு “நிகண்டு நூல் இயற்றியவர் என்று பொருள் கொள்வதை விட “நிகண்டவாதி” என்று பொருள் கொள்வதுதான் ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

66

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்னும் பொய்யா மொழியைப் பின்பற்றி பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் உண்மைப் பொருள் விளங்கும்.