பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

197

பாடியிருப்பதனாலே இப்புலவர் அப்பாண்டியன் காலத்தவர் ஆவார். அதாவது ஏறக்குறைய கி.பி. 200 இல் இவன் இருந்திருக்க வேண்டும் என்று கொள்ளலாம்.

அப்பாண்டியனால் போற்றப்பட்டவரும், அப்பாண்டியன் மீது மதுரைக்காஞ்சி பாடியவரும் ஆகிய மாங்குடி மருதனாரும் கல்லாட னாரும் சமகாலத்தவர் ஆவர். இந்தப் பாண்டியன்மேல் நெடுநல்வாடை பாடிய நக்கீரனாரும் கல்லாடனார் காலத்தில் இருந்தவர்.

தம்முடைய காலத்தில் இருந்த தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனையும், அம்பர்கிழான் அருவந்தையையும் பொறையாற்றுக் கிழானையும் வில்லியையும் பாடிய கல்லாடனார் தம் காலத்துக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் தமக்கு முன்பு இருந்த அரசர்களையும் தமது செய்யுட்களில் குறிப்பிடுகிறார். இதனால், இவர் அவர்கள் காலத்திலிருந்தவர் என்று கருதக்கூடாது. இவர் குறிப்பிடுகிற பழைய அரசர்கள் யாவர் என்பதைப் பார்ப்போம்.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், துருநாட்டு நன்னனுடன் போர் செய்து அவன் கைப்பற்றியிருந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்ட செய்தியைக் கல்லாடனார் கூறுகிறார்.

66

குடாஅது

இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடுதந் தன்ன வளம்.

- (அகம்-199: 18-24) இந்தக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனின் மகன் ஆவன். சேரன் செங்குட்டுவனுக்கும் பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் தமயன் ஆவன். எனவே, இவன் கல்லாடனார் காலத்துக்கு ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கு முன் இருந்தவன்.

முள்ளூர் மன்னனாகிய மலையமான் திருமுடிக்காரி (இவன் ஒரு வள்ளல்) என்னும் சிற்றரசன் கொங்கு நாட்டிலிருந்த ஓரி என்பவனுட ன் (இவனும் ஒரு வள்ளல்) போர் செய்து அவனுடைய கொல்லிப்